புனேவின் சிவப்பு விளக்கு பகுதியில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் பாலியல் தொழிலாளியை பிளேடால் கிழித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புனேவின் வாதார்வாடி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா (40). இவர் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி புத்வார் பெத் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பாலியல் தொழிலாளி பெண் (35) ஒருவரிடம் விபச்சாரத்திற்கான தொகை குறித்து ராஜப்பா பேரம் பேசியுள்ளார். தொடர்ந்து, இருவருக்கும் இடையே பேரம் வாக்குவாதமாகவும் மாறியுள்ளது. ஒருகட்டத்தில் ராஜப்பாவின் பேரத்தை ஏற்காத அந்த பெண், அவருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜப்பா, அந்த பாலியல் தொழிலாளி பெண்ணின் மார்பகத்தை தான் வைத்திருந்த சேவிங் பிளேடால் சரமாரியாக கிழித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அந்த பெண் வலியால் துடித்துள்ளார். தொடர்ந்து உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: மன அழுத்தமே செக்ஸ் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ராஜப்பாவை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஐபிசி 307, 506 பிரிவுகளின் கீழ் கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த பாலியல் தொழிலாளி பெண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.