புனே மருத்துவமனையில் நிரம்பிய படுக்கைகள் - கொரோனா நோயாளிகளுக்கு காத்திருக்கும் பகுதியிலேயே சிகிச்சை!

புனே மருத்துவமனையில் நிரம்பிய படுக்கைகள் - கொரோனா நோயாளிகளுக்கு காத்திருக்கும் பகுதியிலேயே சிகிச்சை!

புனே

புனேயில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளதால் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
புனேயில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காத்திருக்கும் பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது மகாராஷ்டிரா. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான 10 மாவட்டங்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவை. மும்பை, புனே, நாக்பூர், தானே, நாசிக் போன்ற மாவட்டங்களில் நோய்த்தொற்று கடுமையாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக புனேவில் நோய்த்தொற்று பாதிப்பின் அளவு மிக அதிகமாக உள்ளது. கடந்த ஞாயிறன்று புனேவில் 12,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 8,211 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புனேவில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 81,000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அங்கு 82,000 பேர் சிகிச்சையில் இருந்தனர், இதுவே அதிகபட்ச ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையாக இருந்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்றே உயரக்கூடும் என தெரிகிறது.

இதனிடையே புனேவில் உள்ள யஷ்வந்த் ராவ் மெமோரியல் மருத்துவமனை மொத்தம் 400 படுக்கை வசதிகளை கொண்டது. இதில் 55 படுக்கைகள் ஐசியூ படுக்கைகளாகும். இன்றைய தேதியில் இந்த மருத்துவமனையில் ஒரு படுக்கை கூட நோயாளிகள் இல்லாமல் இல்லை. அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளதால் மருத்துவமனையின் வரவேற்பு/காத்திருப்பு பகுதியில் கூடுதலாக படுக்கைகள் போடப்பட்டு புதிதாக நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் கவுஷ்துப் ககானே கூறுகையில், புதிதாக நோய்த்தொற்றாளர்கள் வரும் போது அவர்களின் நோய்த்தொற்று தீவிரத்தன்மையை பொறுத்தே அனுமதிக்கிறோம். அவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை இருந்தால் எங்களிடம் அதனை சரி செய்ய கைவசம் உபகரணங்கள் கிடையாது. மாற்று ஏற்பாட்டின் பேரிலேயே நிலைமையை சரிசெய்து வருகிறோம். என்றார்.

புனேயில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளதால் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Arun
First published: