ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் இல்லை: 11 ஆண்டுகளாக சேவை செய்யும் புனே டாக்டர்!

பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் இல்லை: 11 ஆண்டுகளாக சேவை செய்யும் புனே டாக்டர்!

மருத்துவர் கணேஷ் ராக்

மருத்துவர் கணேஷ் ராக்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் அந்த தாயிடம் கட்டணம் ஏதும் வாங்காமல் இலவசமாக மருத்துவ சேவை வழங்கி வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pune, India

  இந்தியாவில் மக்களிடையே பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் விதமாக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் Beti Bachao Janandolan என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்தது.

  இந்த திட்டத்தில் தனது பங்களிப்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் அந்த தாயிடம் கட்டணம் ஏதும் வாங்காமல் இலவசமாக மருத்துவ சேவை வழங்கி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஹதப்சார் என்ற பகுதியில் மகப்பேறு மருத்துவமனையை நடத்தி வருகிறார் மருத்துவர் கணேஷ் ராக். இவர் நாட்டில் பெண் சிசு கொலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் 2012ஆம் ஆண்டு புதிய முயற்சியை தொடங்கினார். அதன்படி, தனது மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அவர்களிடம் இவர் மருத்துவ கட்டணம் ஏதும் பெறுவதில்லை.

  சுமார் 11 ஆண்டுகளாக பெண் குழந்தை பிரசவத்திற்கு இலவசமாகவே மருத்துவ சேவை செய்து வருகிறார்.இதுவரை சுமார் 2,400 பெண் குழந்தைகளுக்கு கட்டணமின்றி இலவசமாக பிரசவம் பார்த்து வருகிறார்.

  மேலும், இந்த மருத்துவமனையில் குழந்தை பிறந்த குடும்பத்திற்கு இனிப்புகள், பூக்கள் வழங்கி மகிழ்ச்சியான முறையில் அனுப்பிவைக்கிறார் மருத்துவர் கணேஷ்.இது குறித்து மருத்துவர் கணேஷ் கூறுகையில், 2012இல் மருத்துவமனை தொடங்கிய காலத்தில் நான் பெற்ற அனுபவத்தின் காரணமாகவே இந்த முயற்சியை தொடங்கினேன். அப்போது எல்லாம், பெண் குழந்தை பிறந்தது என்றால் அவரது குடும்பத்தினரே யாரும் ஆர்வத்துடன் வந்து குழந்தையை பார்க்க விரும்புவதில்லை.

  பெண் குழந்தையை சமூகம் பாரமாக நினைக்கும் வேளையில், அவர்களுக்கு பெண் சிசு தொடர்பான விழப்புணர்வு மற்றும் பாலின சமத்துவத்தை புரிய வைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை தொட்கினேன்.

  இதையும் படிங்க: உலகின் 3ஆவது பெரிய மெட்ரோ சேவையாக இந்தியா முன்னேறும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்

  Beti Bachao Janandolan அரசு திட்டத்தின் எனது முயற்சியும் சிறிய அங்கமாகும். அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த 10 ஆண்டுகளில் 6 கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளன. இது ஒரு இன அழிப்பாகும். இது போன்ற விழிப்புணர்வு முயற்சிகளால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என நம்புகிறேன் என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Doctor, Girl Child, Pune