ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து.. உருக்குலைந்த 18 உயிர்கள்.. பிரதமர் மோடி இரங்கல்

புனே தீ விபத்து

ஆலையில் 2 மாதங்களுக்கு முன்னர் தான் பணியில் சேர்ந்தார். பேக்கிங் பணியில் ஈடுபட்டு பலியான அப்பெண்ணுக்கு இரு குழந்தைகள் இருப்பதாக அவர் தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது.

  • Share this:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள பிராங்குட் பகுதியில் உள்ள SVS Aqua Technologies என்ற ஆலையில், ரசாயனங்கள் உற்பத்தி நடைபெற்று வந்தது. பேக்கிங் உள்ளிட்ட பணிகளில் பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென இந்த ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

மளமளவென தீ பரவியதால் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீயை அணைக்க போராடிய போது ரசாயணங்களில் தீ பரவியதால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது.

இதனிடையே ஆலை கட்டடத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்க ஜே.சி.பி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கட்டட சுவர்கள் உடைக்கப்பட்டன. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கோர விபத்தில் 15 பெண்கள் உட்பட 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அடையாளம் தெரியாத வகையில் தீயில் கருகி இருந்தனர்.

தீ விபத்து நடந்த போது 37 பேர் பணியில் இருந்துள்ளனர். இவர்களில் 18 பேர் பலியாக, தீயில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் முல்ஷி தாலுகாவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒரே இடத்தில் சேர்ந்து இருந்த தகவலையும் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Also Read:   மருத்துவக் கவனிப்பு இல்லை, விழிப்புணர்வு திட்டங்கள் இல்லை: கொரோனாவால் முழுவதும் கைவிடப்பட்ட பழங்குடி மக்கள்

இந்த கோர விபத்தில் பலியானவர்களுள் ஒருவரான மங்கள் மார்கலே (வயது 25) என்ற பெண்ணின் உறவினர் கூறுகையில், என்னுடைய சகோதரரின் மனைவியான மங்கள் மார்கலே, சமையல் பார்த்து வந்தார், பொதுமுடக்கம் காரணமாக வேலையை இழந்த அவர், இந்த ஆலையில் 2 மாதங்களுக்கு முன்னர் தான் பணியில் சேர்ந்தார். பேக்கிங் பணியில் ஈடுபட்டு பலியான அப்பெண்ணுக்கு இரு குழந்தைகள் இருப்பதாக அவர் தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது.

புனே தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Also Read:    ‘அப்படி சொல்லாதடா ச்சாரி மனசெல்லாம் வலிக்கிறது’ - மஞ்சரேக்கருக்கு கவுண்டர் கொடுத்த அஸ்வின்!

இதே போல மகாராஷ்டிர அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்து குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புனே தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.
Published by:Arun
First published: