• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புல்வாமா தாக்குதலில் கணவர் வீரமரணம்.. கணவரின் தடத்தை பின்பற்றி ராணுவத்தில் இணைந்த மனைவி

புல்வாமா தாக்குதலில் கணவர் வீரமரணம்.. கணவரின் தடத்தை பின்பற்றி ராணுவத்தில் இணைந்த மனைவி

நிகிதா கவுல்

நிகிதா கவுல்

சென்னையில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியை தொடங்கினார்.

  • Share this:
    புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுந்தியாலின் மனைவி நிகிதா கவுல் நாட்டுக்காக சேவையாற்ற ராணுவத்தில் இணைந்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடந்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். வெடிப்பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தை மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதச் செய்து இந்த தாக்குதலை நடத்தினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுந்தியால் வீரமரணம் அடைந்தார்.

    Also Read: Gayathri Raguramm: நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் துன்புறுத்தல் புகார்

     

    விபூதி சங்கர் தவுந்தியாலுக்கு திருமணமாகி 11 மாதங்கள்தான் ஆகி இருந்தது. முதலாவது திருமணநாளை கொண்டாட ஏப்ரல் மாதம் விடுப்பில் வருவதாக மனைவியிடம் தெரிவித்திருந்தார். ஆனால் மூவர்ண கொடி போர்த்திய அவரது உடலைத்தான் அவரது மனைவியால் பார்க்கமுடிந்தது. “நீங்கள் என்னை நேசித்தீர்கள் என்று சொன்னீர்கள் ஆனால் உண்மை என்னவென்றால் நீங்கள் இந்த தேசத்தைதான் அதிகம் நேசித்தீர்கள். உங்களால் நான் பெருமைப்படுகிறேள்” என கண்ணீர் வடித்தார்.

     



    நிகிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்த பணியை உடனடியாக உதறித்தள்ளினார். கணவரின் தடத்தை பின்பற்ற நினைத்த நிகிதா ராணுவத்தில் சேருவது என முடிவு செய்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டார். சென்னையில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியை தொடங்கினார். 11 மாத பயிற்சிக்கு பின்னர் பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சியில், நிகிதா கவுல் ராணுவ உடையுடன் வந்து இந்திய ராணுவ வடக்கு கமாண்டர் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியிடம் நட்சத்திரத்தை அணிந்து கொண்டு முறைப்படி ராணுவத்தில் இணைந்துக் கொண்டார்.

    Also Read: Vairamuthu: ’ஓ.என்.வி விருதை திருப்பி அளித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்’ கவிஞர் வைரமுத்து

    இதுகுறித்து பேசியுள்ள நிகிதா சவுல், “ என் பயணம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். என் மாமியார், அம்மா மற்றும் பலர் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்” எனக் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: