புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் என்.ஐ.ஏ திணறல்

உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு மரியாதை.

 • News18
 • Last Updated :
 • Share this:
  புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு ஆன பிறகும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி பொருள் எங்கிருந்து கிடைத்தது? என்பதை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  கடந்தாண்டு இதே நாளில் காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர்கள் யாரும் உயிருடன் இல்லாததால் தேசிய புலனாய்வு முகமையால் இன்னும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை.

  கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில், முதாசீர் அகமது கான், சஜ்ஜாத் பட் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதாலி அகமது தார் என்ற பயங்கரவாதி தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை ராணுவ வாகனம் அருகே நிறுத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், 25 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி பொருள் எங்கிருந்து கிடைத்தது? என்பதை கண்டுபிடிக்க முடியாமலும் என்ஐஏ அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

  புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவிடம் இன்று திறந்துவைக்கப்படுகிறது.
  Published by:Sankar
  First published: