குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத என்.ஐ.ஏ: புல்வாமா தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின்! கொதிக்கும் காங்கிரஸ்

தேசிய புலனாய்வு அமைப்பு

 • Share this:
  தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் புல்வாமா தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

  காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் 40 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்துவருகிறது. இதுதொடர்பான வழக்கு டெல்லியிலுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக யூசுஃப் சோபன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

  இந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள யூசுஃப் சோபன் சார்பில் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கைது செய்யப்பட்டு 180 நாள்களான நிலையிலும் என் மீது இதுவரையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனக்கு ஜாமின் அளிக்கவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் விளக்கமளித்த என்.ஐ.ஏ, ‘போதிய ஆதாரம் இல்லாததால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இயலவில்லை. மேற்கொண்டு விசாரணை நடத்தவேண்டும்’ என்று கோரப்பட்டது.

  வழக்கு விசாரித்த பர்வீன் சிங், ‘குற்றம்சாட்டப்பட்ட யூசுஃப் சோபன் வாதத்தை ஏற்று, ‘ரூ.50,000-தை செலுத்தி சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர். நாட்டை உலுக்கிய புல்வாமா தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத என்.ஐ.ஏவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் அகமது படேல், ‘புல்வாமா தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைவிட்டு விட்டு என்.ஐ.ஏ வேறு விஷயத்தில் பரபரப்பாக உள்ளது. இது நாட்டுக்காக உயிர்நீத்துவர்களுக்கு செய்யும் அவமானம். அரசியல் காரணங்களுக்காக அரசு இந்த தாக்குதலை பயன்படுத்திக் கொண்டது. நீதிவாங்கிக் கொடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: