• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • போதையில் தகராறு... பிரபல யூடியூப் சமையல் கலைஞர் 'டாடி ஆறுமுகத்தின்' மகன் கைது

போதையில் தகராறு... பிரபல யூடியூப் சமையல் கலைஞர் 'டாடி ஆறுமுகத்தின்' மகன் கைது

புதுச்சேரியில் குடிபோதையில் தகராறு செய்த பிரபல யூட்யூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • Share this:
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் நேற்று இரவு 10 மணிஅளவில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உள்பட அவரது நண்பர்கள் 3 பேர் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.இரவு 11.20 மணிக்கு மதுபிரிவு மூடிய பிறகு மது கேட்டு தகராறு செய்துள்ளனர். அதிகமாக மது அருந்திய இவர்கள் தனியார் உணவக ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தகாத வார்த்தையால் பேசியும் தகராறில் ஈடுபட்டனர்.

இதனை ஓட்டல் ஊழியர் ஜார்ஜ் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத்துக்கும் ஹோட்டல் ஊழியருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த டாடி ஆறுமுகம் மகன் கோபி அங்கு இருந்த பீர் பாட்டிலை எடுத்து சார்ஜை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தகராறை பக்கத்தில் உள்ளவர்கள் விளக்கியும் சிறிது அடங்காமல் டாடி ஆறுமுகம் மகன் மற்றும் 3 பேரும் கடுமையான ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும் ஓட்டலில் உள்ள அனைத்து பொருட்களையும் சூறையாடி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் தகராறில் ஈடுபட்ட டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத்,ஜெயராம்,தாமு ஆகியோரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பூர்வீகமாகக் கொண்டவர் இந்த டாடி ஆறுமுகம். பிரபல யூடியூப் சமையல் கலைஞரான இவர் வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற சானலை நடத்தி வருகிறார். 46 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த சானலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Musthak
First published: