Puducherry | புதுச்சேரியில் ஊடரங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.. தடையை மீறி விளையாடியவர்களை தன்னார்வலர்களாக மாற்றிய காவல் அதிகாரி..

புதுச்சேரியில் ஊடரங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்

புதுச்சேரியில் ஊடரங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுக்கு காவல் அதிகாரி நூதனமான தண்டனை விதித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடினார்கள். இதுதொடர்பான புகைப்படங்கள் வாட்ஸ் அப் குழுவில் பரவின. கொரோனா ஊரடங்கை மீறி ஒன்று கூடி நோய் பரப்பும் வகையில் செயல்பட்ட இளைஞர்களுக்கு அபராதமோ தண்டனையோ கொடுக்காமல் அவர்களை நூதனமாக கையாண்டுள்ளார் புதுச்சேரியின் பெண் காவல் துறை அதிகாரி ரட்சனா சிங்.

தடையை மீறி விளையாடியவர்களை தன்னார்வலர்களாக மாற்றிய காவல் அதிகாரி


தடையை மீறி கிரிக்கெட் விளையாடியவர்களின்புகைப்படங்களில் அடையாளம் காணப்பட்டவர்களை தேடி பிடித்து வர போலீசாரை அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில் கண்டறியப்பட்டவர்களை போலீசாருடன் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களாக மாற்றினார். கொரோனா காலத்தில் முன் களப்பணியாளர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பணியாற்றுகிறார்கள் என்பதை உணரவே இந்த நூதன தண்டனை என்கிறார் ரட்சனா சிங்.

மேலும் படிக்க... Puducherry | புதுச்சேரியில் கொரோனா பரவல் 50% குறைந்தது: தமிழிசை தகவல்



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: