வறுமையின் காரணமாக சிலர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுவது வழக்கம். சிலர் எளிதில் பணம் கிடைக்க வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் உண்டு. ஆனால் புதுச்சேரியில் மது குடிக்கவும், மதுவுக்கு சைடிஷ் தயாரிக்கவும் மீன்களை திருடியவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜேஷ்( 37). பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மீன்களை, குபேர் அங்காடி பெரிய மார்க்கெட் மீன் அங்காடியில் ஐஸ் பெட்டியில் வைத்திருந்தார். மீன் விற்பனை செய்ய ,மீன் பெட்டியை ராஜேஷ் திறந்து பார்த்தார். ஐஸ் பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மீன்கள் திருடுபோயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நடைபாதையில் வசிக்கும் விஜய்(22), சதீஷ்(22) மற்றும் குரு ஆகியோர் மீன்களை திருடியது பதிவாகியிருந்தது.
இதையடுத்து விஜய், சதீஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் தப்பியோடிய குருவை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் சாலையோரத்தில் தங்கி, நகர பகுதியில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இரவில் ஐஸ்பெட்டிகளை திறந்து மீனை திருடி விற்று மது வாங்கியுள்ளனர். மது அருந்த சைடிஷ்ஷாக திருடிய மீனை சமைத்து தின்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.