• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முந்தாணையில் மறைத்து ஹார்லிக்ஸ், பூஸ்ட் டப்பாக்கள் திருடும் பெண்கள்..

முந்தாணையில் மறைத்து ஹார்லிக்ஸ், பூஸ்ட் டப்பாக்கள் திருடும் பெண்கள்..

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரியில் உடல் பருமனை சாதகமாக்கி நெய் ஹார்லீக்ஸ் பூஸ்ட் மட்டும் திருடும் பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Share this:
புதுச்சேரியில்  டிபார்ட்மென்ட் ஸ்டோரில் விலை உயர்ந்த பொருட்களை திருடிய 2 பெண்களை சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி - கடலூர் செல்லும் சாலையில் உள்ள நயினார் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது ஜி எஸ் என்கிற தனியார் டிபார்ட்மென்டல் ஸ்டோர். இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உள்ள பொருட்களை கணக்கெடுக்கும் போது விலை உயர்ந்த நெய், ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட விலை அதிகமுள்ள உணவு பொருட்கள் காணாமல் போயிருப்பதை அறிந்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கடந்த 29ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்குள் வந்த பருமனான இரு பெண்கள் விலை உயர்ந்த ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் டப்பாக்களை தங்களது முந்தானையில் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

அவர்கள் பருமனாக இருப்பதால் பொருட்களை மறைத்திருப்பது தெரியவில்லை. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையின் உரிமையாளர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையில் திருடும் பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: