கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் ஊர்களை குறி வைத்து திருட்டு: திருடிய பணத்தில் டிவி, வாஷிங் மிஷின் வாங்கிய பலே பெண்மணி..!

கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் ஊர்களை குறி வைத்து கைவரிசை காட்டிய பெண்மணி

ஏற்கனவே இவர் முதலியார்பேட்டையில் கும்பாபிஷேகம் நடந்த போது இதே பாணியில் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடியுள்ளார்.

  • Share this:
    புதுச்சேரியில் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் ஊர்களை குறி வைத்து ஆள் இல்லா வீடுகளில் திருட்டில் ஈடுப்பட்டு வந்த பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கிருமாம்பாக்கம் காவல் நிலைய போலீசார் புதுச்சேரி - கடலூர் சிலை முள்ளோடை சந்திப்பில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். காலை 8.45 மணியளவில் மதிகிருஷ்ணாபுரத்தில் இருந்து வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் ஒரு பெண் நபர் உட்கார்ந்து இருந்தார். அவர் போலீசாரை கண்டதும் திருதிருவென முழித்தார். முன்னுக்கு பின் முரணாக பேசினார். கையில் ஒரு பை வைத்திருந்தார். அவரை பெண் காவலர் உதவியோடு தீர விசாரிக்க தன் பெயர் ராஜி (43) மதிகிருஷ்ணாபுரம், புதுச்சேரி என்று சொன்னார்.

    அவர் கையில் இருந்த கை பையை பரிசோதனை செய்ததில் ரூபாய் 1,50,000 இருந்தது. பணத்தைப்பற்றி விபரம் கேட்க கடந்த ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் கும்பாபிஷேகத்தின் போது பனிதிட்டு கிராமத்தில் வீரப்பன் என்பவருடைய வீட்டில் ஜனவரி 27ம் தேதி திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், கும்பாபிஷேகத்தின் போது பனிதிட்டில் ஒரு வீடு சாத்தப்பட்டு சாவியை ஜென்னல் அருகே ஒரு அட்டைப் பெட்டியில் இருந்ததை பார்த்து சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டினுள் சென்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெட்ரூமில் செல்பில் இருந்த சாவியை எடுத்து அலமாரியை திறந்து அதில் இருந்த ரூ.40,000 பணத்தையும் இரண்டு நகைகளையும் திருடிக்கொண்டு சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு ஒரு ஆட்டோ முலம் வீட்டிற்கு வந்துள்ளார். நகையை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு அந்த பணத்தில் ரூ.25,000/- க்கு வாஷிங் மெஷின் ஒன்று வாங்கியுள்ளார். மீதி பணத்தை வீட்டு செலவு செய்துள்ளார்.

    அதன்பின் டிவியில் விளம்பரத்தை பார்த்து இரண்டு நகைகளையும் கடலூரில் விற்று 5 லட்சம் ரொக்க பணத்தை வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

    இந்தநிலையில் இன்று கொரோனா ஊரடங்கு வாகன சோதனையின் போது ஆட்டோவில் 2000 ரூபாய் நோட்டு கட்டுடன் பிடிப்பட்டார்.. 1,50, 000 ரூபாய் கடனை திரும்பி செலுத்த சென்றதாக கூறிய அவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டு விசாரிக்கையில் சிக்கி கொண்டுள்ளார்.

    ஏற்கனவே இவர் முதலியார்பேட்டையில் கும்பாபிஷேகம் நடந்த போது இதே பாணியில் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடியுள்ளார். அரியாங்குப்பத்தில் ஒரு கும்பாபிஷேகத்தில் ஒரு வீட்டில் 10 பவுன் நெக்லசை திருடியுள்ளார்.

    கும்பாபிஷேகம் நடைபெறும் ஊர்களுக்கு பக்திமயமாக செல்லும் இவர் சாவியை வைத்து விட்டு செல்லும் வீடுகளில் மட்டும் கைவரிசை காட்டும் நூதன திருடியாக இருந்துள்ளார்.

    இவ்வழக்கில் தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் உத்தரவின்பேரில் மற்றும் பாகூர் வட்ட ஆய்வாளர் வரதராஜன், கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகானந்தன் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்டு கொடுத்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: