• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? : துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? : துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

    புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு சிகிச்சை முகாமினை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாட்டின் 11 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் புதுச்சேரியில் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. இருந்தபோதிலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    கொரோனா தடுப்பு தொடர்பாக வியாழக்கிழமை தோறும் உயர்மட்ட கூட்டம் நடத்தி வருகிறோம். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்திருக்கிறோம். தடுப்பூசி போடுவது, சோதனைகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். பல இடங்களிலும் இதற்காக முகாம்கள் நடத்த இருக்கிறோம்.

    மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச ஆளுநர்களுடன் பிரதமர் வியாழக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்த உள்ளார். நம்மிடம் போதிய தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது. முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பரவுதை தடுக்க முடியும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறினார்.

    இதனைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுமா, இதுதொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரை ஏதேனும் அரசுக்கு வந்துள்ளதா என்ற கேள்விக்கு, பதிலளித்துப் பேசிய தமிழிசை, “இன்னும் அதுபோன்ற நிலைக்கு நாம் வரவில்லை. இருந்தபோதிலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

    Must Read : மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!

     

    டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: