புதுச்சேரி நகரின் மையத்தில் அமைந்துள்ள வனப்பகுதியின் இயற்கை சூழலை நடந்த வண்ணம் ரசிக்கும் சுற்றுலாவிற்கு வெளிநாட்டவரிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அடுத்து வனத்துறை அலுவலகம் உள்ளது. இதற்கு சொந்தமாக 22 ஏக்கர் காட்டுப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் மூடி கிடந்தது. காட்டின் சூழலை மக்கள் உணர்வதற்கு இதனை குறிப்பிட்ட தூரம் மட்டும் அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
இதன் அடிப்படையில் புதுச்சேரி சுற்றுலா வரைபடத்தில் இந்த நகரக் காடும் இடம்பிடித்துள்ளது. சுற்றுலாவிற்கு வருபவர்கள் காட்டின் 2 கிமீ தொலைவுக்கு நடைப்பயணம் செல்லும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வனத்துறை வளாகத்தில் ஏராளமான நூற்றாண்டு கடந்த மரங்கள் உள்ளன. தற்போது நகர்புற வனத்தை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் பார்வையிட காலை 6 முதல் இரவு 7 வரை கோடையிலும், குளிர்காலத்தில் காலை 7 முதல் மாலை 6 வரையிலும் திறந்திருக்கின்றனர்
தற்போது உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளியூர் சுற்றுலா பயணிகளும் இந்த நகரக் காட்டுக்கு அதிகளவில் வருகை தரத் தொடங்கியுள்ளனர். காட்டுக்குள் இருண்ட சூழல், பறவைகளின் சத்தம், தொங்கும் வவ்வால், ராட்சத மரவட்டை, 30 அடி சுற்றளவு கொண்டு மரம் போன்றவை அவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.