• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணா செய்த பெண்..

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணா செய்த பெண்..

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தன் குழந்தையுடன் பெண் டிஜிபி அலுவலகம் முன் மனைவி தர்ணா செய்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share this:
புதுச்சேரி கொம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சண்முகம். ஐஆர்பிஎன் போலீசாக உள்ளார். பிச்சைவீரன்பேட் பகுதியைச் சேர்ந்த இவரது மனைவி கவிதா. கடந்த 2015-ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்று, தற்போது 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது.



இந்நிலையில், இன்று காலை கவிதா திடீரென தனது கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி டிஜிபி அலுவலகம் முன்பு குழந்தையுடன் தர்ணாவில் அமர்ந்தார். இதனையடுத்து, அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிஷ்சாவைச் சந்தித்து முறையிட வலியுறுத்தினர். இதனையடுத்து கவிதா தனது குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: