சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடும் புதுச்சேரி...! பூத்துக் குலுங்கும் பூக்களை புகைப்படம் எடுக்கும் தன்னார்வலர்கள்

Puducherry Photography Club நடத்தும் உள்ளூர் புகைப்படக் கலைஞர்கள் அவற்றைப் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடும் புதுச்சேரி...! பூத்துக் குலுங்கும் பூக்களை புகைப்படம் எடுக்கும் தன்னார்வலர்கள்
Puducherry Photography Club நடத்தும் உள்ளூர் புகைப்படக் கலைஞர்கள் அவற்றைப் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
  • Share this:
சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிப் போயுள்ளது புதுச்சேரி. நகரமெங்கும் பூத்துக் குலுங்கும் பூக்களை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் தன்னார்வலர்கள் பதிவேற்றி வருகின்றனர்.

சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். அவர்களுள் வெளிநாட்டவர் அதிக அளவில் புதுச்சேரியின் நகர வீதிகளில் நடந்தபடியே சென்று புகைப்படங்களை எடுத்து மகிழ்வதும் வழக்கம்.

குறிப்பாக பிரெஞ்சு மற்றும் இந்தியப் பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட வீடுகளின் முன்பு வளர்க்கப்படும் பாரம்பரிய மரங்களில் இருந்து பூக்கும்  பூக்களின் பின்னணியில் புகைப்படங்களை எடுத்து வெளிநாட்டவர் மகிழ்வர். ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் 18ம் தேதி முதல் தங்கும் விடுதிகள் மூடப்பட்டன, உணவகங்களும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை முழுமையாக நிறுத்தப்பட்டது.


கோடை காலத்தை கடற்கரை நகரமான புதுச்சேரியில் அனுபவிக்க பலரும் விரும்பி வருவார்கள். ஆனால், இம்முறை கொரோனா காரணமாக புதுச்சேரியில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நகரப்பகுதியிலுள்ள பாரம்பரிய வீடுகளில் பூக்கும் பூக்களின் பின்னணியில்  புதுச்சேரியின் உள்ளூர் புகைப்படக்காரர்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இதனைப் பார்க்கும் பலர், 'Miss you Puducherry' என புதுச்சேரியை மிஸ் பண்ணுவதாகப் பதிவிட்டு வருகின்றனர். கோடையை புதுச்சேரியில் அனுபவிக்க முடியாதவர்கள் இப்படி சமூக வலைத்தளத்தில்  பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்து ஆறுதல் அடைகின்றனர்.

மயில் கொன்றை, சரக்கொன்றை, தங்க மழை மரம், செங்கொன்றை, மல்லி மரம், வேங்கை, தமிழ்த் துளி,  மஞ்சள் சுடர் மரம், செண்பகம், பொற் கொன்றை, மழை மரம் போன்ற மரங்களிலிருந்து பூத்துக் குலுங்கும் பூக்கள் நகத்தை மேன்மேலும் அழகூட்டுகின்றன. ஆனால், இந்த அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் இல்லை என்பது மிகப் பெரிய வருத்தம். இதைப் போக்கும் வகையில் Puducherry Photography Club நடத்தும் உள்ளூர் புகைப்படக் கலைஞர்கள் அவற்றைப் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறுதலை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading