புதுச்சேரியில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்களுக்குத் தடை

புதுச்சேரியில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றத் தன்னார்வலர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்களுக்குத் தடை
தன்னார்வலர்கள்
  • Share this:
தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்திலும் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றத் தன்னார்வலர்களுக்குத் தடை விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் அருண்.

காவலர்களைப் போல லத்தியை  வைத்திருக்கவும், அவர்களுடன் இணைந்து போக்குவரத்து பணியின் போது அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட அனைத்து பணிக்கும் தன்னார்வலர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு பணிகளில் மட்டும் ஈடுபடத் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் அனுமதி வழங்கியுள்ளார். சமீபத்தில் வில்லியனூர், திருக்கனூர் போன்ற கிராம பகுதிகளில் தன்னார்வலர்கள் கையில் தடியை வைத்து கொண்டு மக்களை மிரட்டுவதாகவும், பணம் பறிப்பதாகவும் புகார் வந்தன.

படிக்க: கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கை

படிக்க: காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..


மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் பரவின. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் காவலர்களுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிட தக்கது.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading