கழிவு நீர் கலந்த குடிநீர் - புகாரை அடுத்து சரிசெய்யப்படும் என புதுவை எம்.எல்.ஏ உறுதி
இன்றைய தினமே குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளிக்க பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கழிவு நீர் கலந்த குடிநீர்.
- News18 Tamil
- Last Updated: July 10, 2020, 7:08 PM IST
புதுச்சேரி திருக்கனூர் கிராமத்தில் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் சுத்தமான வகையில் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீர் கலங்கலாகவும், அசுத்தமாகவும் துர்நாற்றம் வீசும் வகையில் இருப்பதாக பொதுமக்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டி ஊர் எல்லையில் கூடினார்கள். இந்த குடிநீரை கடந்த ஒரு வாரமாக குடித்து வருவதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார். மேலும் குடிநீரை குடித்து பார்த்தபோது அது அசுத்தமாக இருப்பதை உணர்ந்தார்.
உடனடியாக கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு திருக்கனூர் பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களை பழுது பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். இன்றைய தினமே குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளிக்க பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ALSO READ : சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம் - சிபிசிஐடி