புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரண்டு சுயேட்சை வேட்பாளர்களின் கார்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில், உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சிவசங்கரன். இவரின் காரை என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்தவர்கள் உடைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருபுவனை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் அங்காளனின் கார் உடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.எல்.ஏ. கோபிகாவின் ஆதரவாளர்கள் தாக்கியதாக காவல் நிலையத்தில் அங்காளன் புகார் கூறியுள்ளார்.
30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் தமிழகத்தைப் போலவே ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
Must Read : காலை11 மணி நிலவரப்படி 26.29 % வாக்குகள் பதிவு
காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.