நகராட்சி ஊழியர்களின் போராட்டத்தால் பூங்காவில் தண்ணீரின்றி கருகி வரும் மரம் - செடிகள்...
நகராட்சி ஊழியர்களின் போராட்டத்தால் பூங்காவில் தண்ணீரின்றி கருகி வரும் மரம் - செடிகள்...
பாரதி பூங்கா
Puducherry | புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அரசே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
புதுச்சேரியில் நகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆளுநர் மாளிகை மற்றும் சட்டமன்றம் எதிரேயுள்ள பாரதி பூங்காவில் மரம்-செடிகள் நீரின்றி ஒரு வாரமாக கருகி வருகிறது.
புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அரசே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதன் காரணமாக இறப்பு-பிறப்பு சான்றிதழ் வழங்கும் பணி, மற்றும் துப்புரவு பணி, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பராமரிக்கும் பணி, ஆகியவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆளுநர் மாளிகை மற்றும் சட்டமன்றம் அருகில் உள்ள பாரதி பூங்கா ஒருவாரமாக மூடப்பட்டுள்ளது.இதனால் பூங்காவில் இரு வேளையும் நடைபயிற்சி செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் தினமும் இரு வேளையும் பூங்காவில் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றுவது வழக்கம்.தற்போது கடுமையான வெயில் காய்கிறது.இந்தநிலையில் ஊழியர்களின் போராட்டத்தால் தண்ணீர் ஊற்றாமல் மரம் செடிகள் காய்ந்து வருகின்றன.
பூங்காவை சுற்றியுள்ள அம்பேத்கர் சிலை, வஉசி சிலை, அன்னை தெரேசா சிலை ஆகிய சதுக்கங்கள் பராமரிப்பு இன்றி காய்ந்து கலையிழந்து காணப்படுகின்றன.
இந்த பூங்காவில் பொதுமக்கள் அமர்ந்து இளைப்பாறி செல்வது வழக்கம். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள் இந்த பூங்காவில் அமர்ந்து மதிய உணவு கொடுப்பதும் வழக்கம். ஊழியர்களின் போராட்டத்தால் பாரதி பூங்கா வரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
புதுச்சேரியில் சுற்றுலாத்தலங்கள் மிகக் குறைவாக இருந்தாலும் அவற்றையும் அரசு முறையாக பராமரித்து வருவது அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. ஆனால் ஆளுநர் மாளிகை மற்றும் சட்டமன்றத்துக்கு அருகிலுள்ள பாரதி பூங்கா ஒரு வாரமாக பூட்டப்பட்டிருக்கிறது.
இது சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேவேளையில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்த பூங்காவில் காலை மற்றும் மாலை வேளையில் நடைப்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பூங்கா பூட்டப்பட்டுள்ளதால் நடைபயிற்சி பாதிக்கப்பட்டுள்ளதாக நடைபயிற்சியாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். ஒரு வார காலமாக பூங்காவில் செடி மரங்களுக்கு தண்ணீர் விடாமல் இருப்பது அவை பாதிப்பது மட்டுமல்லாமல் அதை சார்ந்துள்ள பல்லூயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் அல்லது மரம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.