முகப்பு /செய்தி /இந்தியா / புதுச்சேரியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 12 பேர் வேலையில் இருந்து நீக்கம்.. போக்குவரத்து துறை நடவடிக்கை

புதுச்சேரியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 12 பேர் வேலையில் இருந்து நீக்கம்.. போக்குவரத்து துறை நடவடிக்கை

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

அரசு போக்குவரத்து கழகத்தின் வேலைநிறுத்தப்போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது..போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் 12 பேர் அதிரடியாக பணிநீக்கம்..

  • Last Updated :

புதுச்சேரியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள் 12 பேரை வேலையில் இருந்து நீக்கி போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்களும்  பணி செய்து வருகின்றனர். நேர தகராறு காரணமாக கடந்த 10 நாட்களில் ஆரியூர்9A, ரெட்டியார்பாளையம்5A, பத்து கண்ணு11A, முத்தியால்பேட்டை 43A  ஆகிய பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியுள்ளனர்.

இதனை கண்டித்து புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் நேற்று முதல் திடீர் வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர். பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு அனைத்து பேருந்துகளையும் இவர்கள் நிறுத்திவிட்டு வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் குமுளி,மாகே, திருப்பதி, பெங்களூர் போன்ற வெளியூர்களுக்கும் உள்ளூரில் நகரம் மற்றும் கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படவில்லை.

நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது.

புதுச்சேரியில் 80க்கும் குறைவான அரசு பேருந்துகளே உள்ளன. தனியார் பேருந்துகளும் ஆட்டோ,டெம்போக்களும் அதிக அளவில் ஓடுகின்றன.மேலும் தமிழக போக்குவரத்து கழக பேருந்துகளும் இயக்கப்படுவதால் புதுச்சேரி பேருந்து ஓடாததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இருப்பினும் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டத்தால் போக்குவரத்து கழகத்திற்கு 9 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் முன் அறிவிப்பு இன்றி போராட்டத்தை நடத்தும் ஒப்பந்த ஊழியர்களான புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என 12 பேரை போக்குவரத்து கழகம் பணி நீக்கம் செய்துள்ளது.

இதையும் படிங்க: சட்டைக்குள் கோட் அணிந்து பல லட்சம் ரூபாய் கடத்தல்- ஆந்திர இளைஞர் சென்னையில் கைது

top videos

    தனசெயன், விஜயரங்கம், முரளி, கிருபாகரன்,ஜெயராஜ், கிருஷ்ணமூர்த்தி உட்பட 12 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு பணிமனையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்கும் முயற்சியில் திமுக அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா ஈடுபட்டு வருகிறார்.

    First published:

    Tags: Bus Strike, Puducherry, Transport workers