Home /News /national /

புதுச்சேரி ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து அசத்திய திருநங்கைகள்

புதுச்சேரி ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து அசத்திய திருநங்கைகள்

புதுச்சேரி கூத்தாண்டர் கோவில் திருவிழா

புதுச்சேரி கூத்தாண்டர் கோவில் திருவிழா

Puducherry : புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், திருநங்கைகளின் பேஷன் ஷோ இசை, நடனம் என கோலாகல கொண்டாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் நடைபெற்ற பிரசித்திபெற்ற கூத்தாண்டர் கோவில் திருவிழா பேஷன் ஷோவில் ஏராளமான திருநங்கையர் ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.

புதுச்சேரி  பிள்ளையார்குப்பம் கிராமத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அப்போது புதுச்சேரி, சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வருவது வழக்கம்.

விழுப்புரம் கூவாகத்தில் நடப்பது போன்று திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியும் நடைபெறும்.  இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு திருவிழா இந்தாண்டு நடைபெற்றது.

திருத்தேர் உற்சவ விழா கடந்த மார்ச் மாதம் 31ம்தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ கூத்தாண்டவர் சுவாமி திருக்கல்யாணம், பக்தர்கள் தாலி கட்டும் நிகழ்ச்சி இரவு நடந்தது. கூத்தாண்டவர் சாமிக்கு தாலி கட்டி பூஜை செய்தனர். அப்போது திருநங்கைகளும் தங்களுக்கு புதிய உடைகள் மற்றும் புதிய அணிகலன்களை அணிந்து கொண்டும் தாலிகட்டிக்கொண்டும் திருவிழாவில் கலந்து கொண்டு தங்களுக்காகவே நடக்கும் மிஸ் பிள்ளையார்குப்பம் என்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் திருநங்கைகளுக்கு ஃபேஷன் ஷோ, நடனம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை புதுச்சேரியை சேர்ந்த கரிஷ்மா தட்டிச்சென்றார். மிஸ் பிள்ளையார்குப்பமாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு புதுச்சேரி ஐஜி சந்திரன் ஒரு பவுன் தங்க காசு வழங்கினார். அவர் ஆர்வத்துடன் தனது மொபைலில் பேஷன் ஷோவை படம் பிடித்தார்.

மிஸ் பிள்ளையார்குப்பம்


இரண்டாம் பரிசு வென்ற புதுச்சேரியை சேர்ந்த ஷியமலாதேவிக்கு 4 கிராம் தங்ககாசும், மூன்றாம் பரிசு வென்ற புதுச்சேரியை சேர்ந்த மெகந்திக்கு 2 கிராம் தங்க காசும், நான்காம் பரிசு வென்ற இந்துவுக்கு 2 கிராம் தங்க காசும், ஐந்தாம் பரிசு வென்ற சென்னையை சேர்ந்த திரிஷாவுக்கு 2 கிராம் தங்க காசும் வழங்கப்பட்டது.

ஃபேஷன் ஷோ


Must Read : Koovagam : கூவாகம் கோயில் திருவிழா : தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு (படங்கள்)

அப்போது, மேடையில் ஒருமுறை மட்டுமே ஏறியவருக்கு எப்படி முதல் பரிசு கொடுத்தீர்கள் என கூறி ஒருசில திருநங்கைகள் மேடையிலேயே கூச்சலிட்டனர். நேர்மையாக இந்த தேர்வு நடைபெறவில்லை என்றும், ஒருதலை பட்சமாக நடைபெற்றதாக திருநங்கைகள் கூச்சலிட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களில்   பலரும் வெற்றி பெற்ற திருநங்கையருடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்து கொண்டனர்.
Published by:Suresh V
First published:

Tags: Puducherry, Transgender

அடுத்த செய்தி