காஃபி ஷாப்பில் வாடிக்கையாளர்களை கவரும் ஓவியம்..! பாரம்பரிய விளையாட்டை நினைவுப்படுத்தும் முயற்சி

காஃபி ஷாப்பில் வாடிக்கையாளர்களை கவரும் ஓவியம்..! பாரம்பரிய விளையாட்டை நினைவுப்படுத்தும் முயற்சி
ஓவியம் வரையும் போது
  • News18
  • Last Updated: February 14, 2020, 2:09 PM IST
  • Share this:
புதுச்சேரியில் காஃபி ஷாப் ஒன்றில் வரைந்துள்ள பாரம்பரிய விளையாட்டு ஓவியங்களை  வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பயணிகளை ஈர்க்க விதவிதமான வகையில் கடைகளை  நவீன மயமாக அலங்கரித்து வருகின்றனர் அதன் உரிமையாளர்கள்.

ஆனால் பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் முயற்சியாக கேன்டீன்  வீதியில், "பட்டினத்தார்" என பெயரிடப்பட்டுள்ள காபி கடையில் பாரம்பரிய விளையாட்டை நினைவுப்படுத்தும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
பல்லாங்குழி,பம்பரம், கிட்டிபுல், பச்சைகுதிரை, தென்னை ஓலை விளையாட்டு, தண்ணீரில் கப்பல் விடுதல், ஏற்றாமரத்தோழி போன்ற விளையாட்டுகள் வரையப்பட்டுள்ளன.

வெள்ளை சுவற்றில் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் மட்டும் இந்த ஓவியங்களை ஓவியர் பாலமுருகன் வரைந்துள்ளார்.
சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகளை நினைவுபடுத்த சுவற்றில் ஓவியங்களை வரைந்திருப்பது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.அதே போல் பாரம்பரிய உணவுகளான கமர்கட்டு, சுண்டல், வாழைப்பூ வடை போன்றவற்றை அளிப்பதாக கூறுகிறார் கடை  உரிமையாளர் ஸ்ரீதர்.

Also see...
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்