• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பவர்களின் கனவு பலிக்காது: பாஜக தலைவர் சாமிநாதன்

புதுச்சேரியில் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பவர்களின் கனவு பலிக்காது: பாஜக தலைவர் சாமிநாதன்

புதுச்சேரியில் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் திமுக, திக, கம்யூ, விசிக ஆகிய கட்சிகளின் கனவு பலிக்காது என பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் சாமிநாதன், கொரோனா தொற்று நோய் பரவல் அதிகமாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களிடமும் பேசி, கட்சி பாகுபாடின்றி, மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். மத்திய அரசு எல்லா மாநிலத்திற்கும் பாகுபாடின்றி ஒரே மாதிரியான உதவிகளை செய்து வருகிறது. மாநிலங்களுக்கு 50 சதவிகித தடுப்பூசியை மத்திய அரசு கொடுத்துள்ளது. மேலும் 4,500 வெண்டிலேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தடுப்பாடு இல்லை. ஆனால், மக்கள் கொரோனா பயத்தின் விளிம்பில் உள்ள இந்த காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, நாராயணசாமி உட்பட அனைவரும் அரசியல் செய்கிறார்கள். கொரோனா குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தவறாக தகவல்களை பரப்புவது கண்டிக்கதக்கது. அரசியலாக்க கூடாது. மக்களை அச்சப்படுத்த கூடாது என்றார்.

இதுகுறித்து, தேசிய தலைவர் நட்டா 2 தினங்களுக்கு முன்னர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் வெண்டிலேட்டர் 45 ஆயிரம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள் அந்த கடிதத்தை ஊடகத்திற்கு கொடுத்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலகமே நரேந்திர மோடியை பாராட்டி வருகிறது. இதுவரை மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு கோதுமை மற்றும் அரிசி வழங்கியுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் தரம் தாழ்த்தும் வகையில் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை புதுவை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை குறித்த வதந்தியை காங்கிரஸ் பரப்பி வருகிறது. காங்கிரஸ் இதில் அரசியல் செய்கிறது. இதனை பாஜக தேசிய தலைமை வன்மையாக கண்டிக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி போடுவது குறைவாக உள்ளது.

இங்குள்ள நாராயணசாமி கொரேனா தடுப்பு நடவக்கைககள் சரியில்லை என அறிக்கை கொடுத்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. நாராயணசாமி அரசாங்கத்தில் இருந்த அதிகாரிகள் தான் இப்போது உள்ளார்கள். தரம் தாழ்ந்த நடவடிக்கையில் நாராயணசாமி ஈடுபட்டுள்ளார். வரும் காலகட்டத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாமல் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என சாமிநாதன் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க... ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் அறக்கட்டளை

மேலும் புதுச்சேரியில் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் திமுக, திக, கம்யூ, விசிக ஆகிய கட்சிகளின் கனவு பலிக்காது. பாஜக துணை முதல்வர், அமைச்சர்கள் பதவி ஏற்று பணி செய்வார்கள். என்.ஆர்.காங்-பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்றும் சாமிநாதன் தெரிவித்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: