Home /News /national /

புதுச்சேரி முதல்வர் இருக்கைக்கு பின்னால் திருவண்ணாமலை கோபுரம் படம்

புதுச்சேரி முதல்வர் இருக்கைக்கு பின்னால் திருவண்ணாமலை கோபுரம் படம்

சட்டசபை வளாகம்

சட்டசபை வளாகம்

கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற இருப்பதையொட்டி முதல்வர் ரங்கசாமி தனது இருக்கையின் பின்புறம் உள்ள வரைபடத்தை மாற்றி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இருக்கைக்குப் பின்னால் திருவண்ணாமலை கோபுரத்தின் வரைபடம் வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வருக்கான அலுவலகம்  சட்டமன்ற வளாகத்தில் உள்ளது. இந்த அறையில் முதல்வரின் இருக்கைக்கு பின்னால்  கடந்த 10 ஆண்டுகளாய்  புதுச்சேரி கடற்கரையின் பழைய வரைபடம்  காட்சிக்கு இருந்தது. புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி 2021 மே 7ம் தேதி பதவி ஏற்றதும் அவரது அறை மாற்றி அமைக்கப்படவில்லை. கூடுதலாக அவரது ஆன்மீக குருவான சித்தர் அப்பா பைத்தியம் சாமிகளின் படம் வைக்கப்பட்டது. தற்போது அந்த வரைபடம்  மாற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையின் கோபுரங்கள் மற்றும் தீபம் எரியும் மலையுடன் கூடிய இந்த வரைபடம் நேற்று மாற்றப்பட்டது. திருவண்ணாமலைக்கு முன்னால்  ரங்கசாமி உட்கார்ந்து இருப்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு கார்த்திகை தீபத்துக்கு திருவண்ணாமலைக்கு சென்று அவர் தீப தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற இருப்பதையொட்டி அவர் தனது இருக்கையின் பின்புறம் உள்ள வரைபடத்தை மாற்றி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Published by:Ramprasath H
First published:

Tags: Deepam festival, Karthigai Deepam, Pondicherry, Pudhucherry, Thiruvannamalai

அடுத்த செய்தி