• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காரையே கடையாக்கி திருடிய துணிகளை கம்மி விலையில் விற்றுச்சென்ற பலே திருடர்கள்.. சிக்கியது எப்படி?

காரையே கடையாக்கி திருடிய துணிகளை கம்மி விலையில் விற்றுச்சென்ற பலே திருடர்கள்.. சிக்கியது எப்படி?

புதுச்சேரியில் துணிக்கடையை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக துணிகளைத் திருடிச் சென்ற இருவர் மகாராஷ்டிராவில் சிக்கியுள்ளனர்.

  • Share this:
    புதுச்சேரி செயிண்ட் தெரசா வீதியில் பிரபல துணிக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அடையாளம் நபர்கள் சிலர் பூட்டை உடைத்து உள்ளே சென்று 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெடிமேட் ஆடைகளை திருடி சென்றனர்.

    திருட்டு குறித்து கடை உரிமையாளர் ஒம் பிரகாஷ் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார். துணி கடை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட கார் ஒன்று சந்தேகப்படும் படியாக கடை அருகே வந்து சென்றதை போலீசார் கவனித்தனர். அந்த வாகனத்தின் பதிவெண்ணை கொண்டு போலீசார் விசாரணை செய்ததில், அது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பகபேரா என்ற ஊரை சேர்ந்த முகம்மது ரியாஸ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

    இதனைடுத்து பெரிய கடை காவல் நிலைய போலீசார் ராஜஸ்தான் விரைந்து சென்று முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் உசேன் ஆகியோரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.

    அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் துணிக்கடையில் திருட்டில் ஈடுப்பட்டதை அவர்கள் ஒப்புகொண்டனர். இருவரிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தானை சேர்ந்த உசேன் கர்நாடகாவில் நகை திருட்டு வழக்கில் சம்பந்தமுடையவர் என்பது தெரியவந்தது.

    இவர் தனது நண்பர் முகமது ரியாசுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். சுற்றுலா முடித்த போது கையில் இருந்த அனைத்து பணமும் செலவாகி விட்டதால் புதுச்சேரியில் ஏதாவது ஒரு கடையில் பொருட்களை திருடி செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி, ரெடிமேட் துணிக்கடையை நோட்டமிட்ட அவர்கள், நள்ளிரவில் கடையை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக ஜீன்ஸ், பேண்ட்,சர்ட், ஜெர்கின் போன்ற துணிகளை திருடி சென்றுள்ளனர்.

    மகாராஷ்டிரா அருகே செல்லும்போது செலவுக்கு பணம் இல்லாததால் புறவழிச்சாலையில் தங்களது காரையையே கடையாக மாற்றி ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளை Factory sales என கூறி 200, 300 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

    தொடர்ந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை வெறும் 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டு விட்டு அவர்கள் ராஜஸ்தான் சென்று விட்டனர்.

    இதையடுத்து, சிசிடிவியில் சிக்கிய கார் பதிவெண்ணை கொண்டு விசாரித்ததில் இவர்கள் சிக்கி கொண்டனர். இருவரையும் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: