புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கு தரையில் படுக்க வைத்து சிகிச்சை...

புதுச்சேரியில் ஒரே நாளில் 2000 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால் தரையில் படுத்தும் நாற்காலியில் அமர்ந்து சிகிச்சை பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஒரே நாளில் 2000 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால் தரையில் படுத்தும் நாற்காலியில் அமர்ந்து சிகிச்சை பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
புதுச்சேரியில் கட்டுபாடுகள் பல விதித்தும் கொரோனா நோய் தொற்று குறைந்தபாடில்லை. இன்று புதிதாக 2,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 27 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77,031 ஆகவும், உயிரிழப்பு 1,045 ஆகவும் உயர்ந்துள்ளது. சிகிச்சைக்காக அரசு கோவிட் மருத்துமனைக்கு தினமும் குறைந்தது 2000 பேர் வரை வருவதால் சுகாதார துறையினர் திணறுகின்றனர்.

தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அரசு எடுத்தும் எங்கும் படுக்கை இல்லை. அனைத்திலும் நோயாளிகள் நிரம்பியுள்ளனர். அரசு கோவிட் மருத்துவமனையில் போதிய இடைவெளியின்றி படுக்கைகள் போடப்பட்டுள்ளன. அதனையும் மீறி நோயாளிகள் வருவதால் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மீறி வருபவர்கள் நாற்காலியில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்.மேலும் படிக்க... Rajinikanth: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்!

இந்தநிலையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த
தடுப்பூசி எடுத்து கொள்வதே சிறந்தது. எடுத்து கொண்டவர்களுக்கு வராது. சிலருக்கு வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது என துணை ஆட்சியர் கிரி சங்கர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி இன்று மட்டும் 1,247 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 60,424 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: