புதுச்சேரியில் உள்ள கோவிலில் உண்டியல் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்

புதுச்சேரியில் உள்ள கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட இருவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் சிக்கியுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள கோவிலில் உண்டியல் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்
சிசிடிவியில் சிக்கிய உண்டியல் திருடன்
  • Share this:
புதுச்சேரி நகரின் மையத்தில் அண்ணா சாலை இருக்கிறது. இங்கு 45 அடி சாலை சந்திப்பில் அமைந்துள்ள சாலை பிள்ளையார் கோயில் 60 ஆண்டுகளுக்கு மேலாய் உள்ளது. சமீபத்தில் இக்கோயில் புனரமைக்கப்பட்டு புதிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

சிறிய கோயில் என்றாலும் இதற்கு பக்தர்கள் ஏராளம் வருவதுண்டு. இதனால் உண்டியலில் பணம் நிறைய சேருவது வழக்கம். இந்த உண்டியலை நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அளவில் ஆட்டோவில் வந்து திருடர்கள் சுலபமாக உண்டியலை தூக்கிச் சென்றனர்.

Also read: பாட்டிலில் பெட்ரோல் தராததால் அறைக்குள் விஷப் பாம்புகளை வீசிச் சென்ற இளைஞர் - ஷாக் வீடியோ


ஒருவன் ஆட்டோவை ஓட்டி வர மற்றொருவன் உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் சிக்கியுள்ளது. இது பற்றி பெரிய கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். கொரோனா காரணமாக புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் நடமாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடை நேரத்தை சாதகமாக்கி துணிச்சலுடன் ஆட்டோவில் வந்து கோவில் உண்டியலை ஏற்றிச் செல்லும் நபரையும் அவருடன் ஆட்டோ ஓட்டி வந்தவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading