கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டவர் வீட்டில் திருட்டு

புதுச்சேரியில் கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டவர் வீட்டில் திருட்டு
திருட்டு நடந்த இடம்
  • Share this:
புதுச்சேரி கிருஷ்ணா நகர் 12 வது குறுக்கு தெருவில் வசிக்கும் தையல் கலைஞர் வீர செல்வம். இவரது வீட்டு மாடியில் வசிப்பவருக்கு கொரோனா நோற்று தொற்று உறுதியானது. இதனால் அவரையும் வீட்டில் வசித்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வீடும் தனிமைப்படுத்தப்பட்டது.

இதனிடையே  வீரசெல்வம் தனது வீட்டை பூட்டி லாஸ்பேட்டையில் உள்ள  உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை சாதகமாக்கி  கொண்ட மர்ம ஆசாமி, வீட்டு கதவை உடைத்து 20,000 ரூபாய் பணம் மற்றும் 4 பவுன் நகையை திருடி சென்றுள்ளார். 

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில்  லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா பாதித்த அந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்த போலீசாரும் கைரேகை நிபுணர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Also read... தவித்த தள்ளு வண்டி வியாபாரி... ஆறுதல் கூறி உதவிய காவல் ஆய்வாளர்...!தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட குடியிருப்போர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading