• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தோனியின் உருவத்தை 12 அடியில் ரங்கோலியாக வரைந்து அசத்திய பெண்!

தோனியின் உருவத்தை 12 அடியில் ரங்கோலியாக வரைந்து அசத்திய பெண்!

தோனி ஓவியம்

தோனி ஓவியம்

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் டோனியின் உருவத்தை 12 அடியில் ரங்கோலியாக வரைந்து அசத்தியுள்ளார்.

  • Share this:
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில், சென்னை வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தோனியின் உருவத்தை 12 அடியில் ரங்கோலியாக வரைந்து அசத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் புதுச்சேரி ஓவிய பட்டதாரி பெண்ணான அறிவழகி.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அறிவழகி. ஓவிய பட்டதாரி பெண்ணான இவர், தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களது உருவத்தை ரங்கோலி மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு ஓவியங்களாக வரைந்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் சென்னை அணி வெற்றி பெற வாழ்த்தும் வகையில் ஓவியர் அறிவழகி 12 அடி உயரம் மற்றும் 12 அடி அகலத்தில் தோனியின் உருவத்தை தத்ரூபாமாக வரைந்து அசத்தியுள்ளார்.

7 கிலோ கோலமாவை கொண்டு 2 நாட்களில் தோனியின் உருவத்தை ரங்ககோலியாக வரைந்து அவருக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓவிய மாணவியின் இந்த ஓவியம் அனைவரின் கவனத்தை மட்டுமல்லாமல் தோனி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தோனி படம்


இந்நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள அரங்கூரைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன். எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகரான இவர், அவர் மீதான தனது நம்பிக்கை, சிஎஸ்கே அணியின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், தனது வீட்டை முழுமையாக மஞ்சள் வண்ணத்தில் மாற்றியிருந்தார். மேலும், வீட்டின் முகப்பில் தோனியின் உருவப் படங்களையும் இடம்பெறச் செய்து அசத்தி இருந்தார்.

Must Read : IPL 2021 Final-CSK vs KKR: இறுதிப் போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத கொல்காத்தா- சமாளிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள தோனி , போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சிஎஸ்கே வுக்கு விசில் போடு -இன்று நடைபெறும் ஆட்டம் நெருப்பு ஆட்டமாக இருக்கும். சிஎஸ்கே அணி இன்று வெற்றி பெற்றும் என்னு கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: