Home /News /national /

சாட்சி கூற வந்தவர் மயங்கி விழுந்து மரணம்... நீதிமன்றத்தில் பரபரப்பு

சாட்சி கூற வந்தவர் மயங்கி விழுந்து மரணம்... நீதிமன்றத்தில் பரபரப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Puducherry News | புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சாட்சி கூற வந்தவர் திடீரென மயங்கி விழுந்த மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தினமும் ஏராளமான வழக்குகள் நடைபெறுவது வழக்கம்.இதற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் வந்து செல்வர். அதுபோல இன்று சிவில் வழக்கு ஒன்றில் சாட்சி கூற கிருஷ்ணமூர்த்தி என்பவர் வந்துள்ளார். வழக்கு விசாரணைக்காக கோர்ட்டு வளாகத்தில் காத்திருந்த கிருஷ்ணமூர்த்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Also Read : 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட விவகாரத்தில் தமிழிசை அரசியல் செய்கிறார் - நாராயணசாமி குற்றச்சாட்டு

    ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Puducherry

    அடுத்த செய்தி