Home /News /national /

புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தும் கொரோனா கிறிஸ்துமஸ் குடில்

புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தும் கொரோனா கிறிஸ்துமஸ் குடில்

ஆசிரியர் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்

ஆசிரியர் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்

புதுச்சேரி நோணாங்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் நுண்கலை ஆசிரியர் சுந்தரராசு ஒவ்வொரு ஆண்டும் குடில் அமைத்துவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆண்டு கொரோனா கிறிஸ்துமஸ் (christmas) குடிலை அமைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
புதுச்சேரியில்  100 சதவிகிதம் கோவிட் - 19 தடுப்பூசி செலுத்தி கொள்ளவதை வலியுறுத்தி ஆசிரியர் கிறிஸ்துமஸ் (christmas) குடில் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

புதுச்சேரி நோணாங்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் நுண்கலை ஆசிரியர் சுந்தரராசு ஒவ்வொரு ஆண்டும் குடில் அமைத்துவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு முன்பு 1 செ.மீ கிருஸ்துமஸ் குடில் செய்துஅசிஸ்ட் உலக சாதனை பெற்றார். அதேபோல் காய்கறிகளால் குடில், குடி தண்ணீர் பிளாஸ்டிக்பாட்டில்கலால் வடிவமைத்த குடில், தேங்காய்களை கொண்டு வடிவமைத்த குடில், 25 வகைதனியங்களை கொண்டு வடிவமைத்த குடில், 700 புத்தக்கங்களை கொண்டு வடிவமைத்தகுடில், கடந்த ஆண்டு 1000 துணி பைகளை கொண்டு குடில் ,மற்றும் பல்வேறு வகையானதிண்பண்டங்களை கொண்டு செய்யப்பட்ட கிருஸ்துமஸ் குடில் செய்து சாதனை புரிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து 9- வது ஆண்டாக இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகைக்காக தனது வீட்டில் வித்தியாசமான முறையில் கோவிட் - 19 தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வை மையமாக கொண்டு 4 அடி உயரமன அளவில் மருந்து செலுத்தும் ஊசியையும், இரண்டு அடி பெரிய அளவில் மாதிரி கோவிட் மருந்துபாட்டில் உருவக்கி அந்த கோவிட் -19 மருந்து பாட்டலின் உட் பகுதியில் மாட்டு தொழுவத்தில்குழந்தை ஏசு பிறப்பது போல் மற்றும் நட்சத்திரம் ஒளிப்பது போலவும், அதில் மதா, சூசையப்பர், ஆடு, மாடு, கழுதை, ஒட்டகம் பேன்றவை உள்ளது போலவும் குடில் வடிவமைத்து உள்ளார்.

மேலும் கிருஸ்துமஸ் மரம் மற்றும் நிலப்பகுதிகளுக்கு மருந்து ஊசியை கொண்டு வழி பாதைசெல்வது போல் அதில் ராஜக்கள் பரிசு பொருள் எடுத்துக்கொண்டும் வருவது போல் பல்வேறுவகையான மின் வண்ண விளக்குகளை கொண்டு இந்த குடில் அமைக்கப்பட்டுள்ளது.

Also read... சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்!

இதில் கிருஸ்துமஸ் தாத்தா டாக்டர் போல் உடை அணிந்து கொண்டுமுக்கசம் போட்டு கொண்டு ஒரு கையில் ஊசி மற்றொரு கையில் கொரோன கோவிட் - 19 தடுப்பூசி மருந்து வைத்து கொண்டு மக்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி செலுத்துவதுபோல் தத்துரூபமாக செய்துள்ளார் ஆசிரியர் சுந்தரதாசு.

Also read... உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டினால் வழக்கு பதிய வேண்டும் - நீதிமன்றம்!

மேலும் குடில் பின் பகுதியில் விழிப்புணர்வு வாசகம் புதுச்சேரியில்100 சதவிகிதம் கோவிட் - 19 தடுப்பூசி செலுத்தி கொரனா இல்லாத உலகம் படைப்போம் எனகிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளர், மேலும் எந்த விதமான தொற்று நோய் வராமல் அனைவரும் கட்டாயம் கோவிட் - 19 தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என்று இந்தகிருஸ்துமஸ் மூலம் பொது மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Christmas, Corona Vaccine, Vaccination

அடுத்த செய்தி