பிறப்பு உறுப்பில் சிறுமிக்கு சூடு... பாலியல் வன்கொடுமை... போக்ஸ்கோ சட்டத்தில் வளர்ப்பு தந்தை கைது

புதுச்சேரியில் 3 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த தாயின் இரண்டாவது கணவரை காவல்துறையினர் போக்ஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறப்பு உறுப்பில் சிறுமிக்கு சூடு... பாலியல் வன்கொடுமை... போக்ஸ்கோ சட்டத்தில் வளர்ப்பு தந்தை கைது
மாதிரி படம்
  • Share this:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை 16 வயதுள்ள சிறுமி ஒருவர் உடலில் சூடு வைக்கப்பட்டு, பலமாக தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் இதனை கண்டு சந்தேகத்துடன் சிறுமியின் தாயிடம் விசாரிக்க ஆரம்பித்தனர். தாய் மழுப்பலுடன் பதில் அளித்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் தகவல் தெரிவித்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.  16 வயது சிறுமியின் தந்தை, சிறுமி சிறு வயதில் இருக்கும்போதே இறந்துள்ளார். இதனால் அவரது தாய் (வயது 40) டைல்ஸ் தொழிலாளியான ராம்குமார் 32 வயதுடைய ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்.


இரண்டாவது கணவர் மூலம் அந்த பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளை, அந்தச் சிறுமி பருவம் எய்தியது முதல் அவரை தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து தாயிடம் கூறினால் உன்னையும், உன் தாயையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி தனது தாயிடம் எதையும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த கொடுமை தாங்காமல் சிறுமி ஒருமுறை வீட்டை விட்டு வெளியேறி தனது தோழி வீட்டில் தங்கியுள்ளார். அவரை காணவில்லை என குடும்பத்தினர் புகார் கொடுத்து பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வீட்டிற்கு திரும்ப வந்த சிறுமிக்கு இரண்டாவது தந்தையின் தொல்லை அதிகரித்துள்ளது.16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தை சில நாட்களாக தான் பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் 3 தங்கைகளையும் கட்டி வைத்து அடித்துள்ளார். இதனை தட்டி கேட்ட 16 வயது சிறுமியை கை- தலையில் பலமாக தாக்கியுள்ளார். ஆயினும் ஆத்திரம் அடங்காத அவர் இரும்பு கம்பியை எடுத்து சிறுமியை சரமாரியாக அடித்துள்ளார்.

மேலும் கம்பியை அடுப்பில் வைத்து சூடேற்றி பிறப்பு உறுப்பில் சூடு வைத்துள்ளார். பலத்த காயத்துடன் மயங்கி விழுந்த சிறுமியை அவரது தாய் பயந்துபோய் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தபோதுதான் உண்மைகள் தெரியவந்தது.

Also read... கிரைண்டர் கல்லைப் போட்டுக் கணவனைக் கொன்ற மனைவி - வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரம்

இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் நாகராஜ், உதவி ஆய்வாளர் இனியன் ஆகியோர் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காமக்கொடுரனை பிடித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயிடம் இருந்த மற்ற 3 குழந்தைகளையும் பாதுகாப்பின்மை காரணமாக குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மீட்டு விடுதியில் தங்க வைத்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு தேவையான படிப்பு வசதிகளை செய்து தர அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading