Home /News /national /

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கான உரிமை எந்த வகையிலும் மறுக்கப்படாது... தமிழிசை உறுதி..

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கான உரிமை எந்த வகையிலும் மறுக்கப்படாது... தமிழிசை உறுதி..

 பிரதமர் அண்மையில் தெலங்கானா வந்திருந்தபோது புதுச்சேரி மக்களைப் பற்றி அக்கறையோடு விசாரித்தார்.

பிரதமர் அண்மையில் தெலங்கானா வந்திருந்தபோது புதுச்சேரி மக்களைப் பற்றி அக்கறையோடு விசாரித்தார்.

பிரதமர் அண்மையில் தெலங்கானா வந்திருந்தபோது புதுச்சேரி மக்களைப் பற்றி அக்கறையோடு விசாரித்தார்.

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வில்லியனூரை அடுத்த ஆரியபாளையத்தில் இன்று  நடைபெற்றது.

முதலமைச்சர் ரங்கசாமி தலைமை ஏற்க துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் அடிக்கல் நாட்டியும் பூமி பூஜை நிகழ்த்தியும் பணிகளைத் தொடங்கி வைத்தார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணி அமைச்சர் லட்சுமி நாராயணன்,  வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா,  சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரி வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புதுச்சேரியை மேம்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம்.

Must Read : உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் திறந்த மனதோடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்னுடைய ஒத்துழைப்பு இருக்கும். ஒரு சகோதரியாக ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கான உரிமை எந்த வகையிலும் மறைக்கப்படாது, மறுக்கப்படாது என கூறினார். புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் இங்கு முதல் அமைச்சர் தான் முதலமைச்சராக செயல்படுகிறார். வேறு யாருமில்லை.. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை மறுக்கப்படாது என்றார்.

புதுச்சேரிக்கு மேலும் பல வளர்ச்சித் திட்டங்கள் வர இருக்கிறது. அதற்கு மத்திய அமைச்சர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.  புதுச்சேரி வளர்ச்சி மாநிலம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற வேண்டும். குறிப்பாக, மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார் என்றும் பாரதப் பிரதமர் அண்மையில் தெலங்கானா வந்திருந்தபோது புதுச்சேரி மக்களைப் பற்றி அக்கறையோடு விசாரித்தார்.

மேலும் படிக்க: ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நாட்டை நாசமாக்க நினைக்கிறது.. திருமாவளவன் வேதனை!!

அனைவரும் புதுச்சேரியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகளின் துணையோடு புதுச்சேரி மிகப்பெரிய வளர்ச்சி பெற இருக்கிறது. அமைதியாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் புதுச்சேரியில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாறும். அனைத்து திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கி வரவேண்டிய திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று வருகிறோம் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகுவதால் மத்திய அரசை அனுகியதற்கு 4 வழி பாதையில் பாலம் அமைக்க நிதி அளித்தது. இதற்கு 70 கோடி திட்டமிடப்பட்டதில் 60 கோடிக்கு ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுச்சேரி முழுவதும் அனைத்து பகுதிகளில் சாலைகள் தரமாக மாற்றப்படும்.

புதுச்சேரியில் உள் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் எண்ணம். இதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்குகிறது. பல பணிகளுக்கு  துணைநிலை ஆளுர் உறுதுணையாக இருக்கிறார் என்றும் கூறினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Puducherry, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி