காஷ்மீரில் நடந்த சம்பவங்களை வைத்து தி காஷ்மீர் பைல்ஸ் (The Kashmir Files) என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு நாடு முழுதும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
புதுச்சேரியிலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் பார்த்து பாராட்டி உள்ளனர். அதேவேளையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் இப்படத்திற்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியை அண்மையில் சந்தித்து மனு அளித்தனர்.
எம்எல்ஏக்களின் கோரிக்கையை ஏற்று தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு கேளிக்கை வரியை புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது. புதுச்சேரி அரசு இதழில் இதற்கான ஆணையை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி திரையரங்குகளில் கேளிக்கை வரியாக 25 சதவிதம் வசூலிக்கப்படுகிறது.இது மட்டுமன்றி GSTயாக 18 சதவிதம் வரை விதிக்கப்பட்டுள்ளது..
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.