Home /News /national /

புதுச்சேரி ஊரடங்கில் ஒரு பக்கம் அடைப்பு - மறுபக்கம் திறப்பு!

புதுச்சேரி ஊரடங்கில் ஒரு பக்கம் அடைப்பு - மறுபக்கம் திறப்பு!

புதுச்சேரி - தமிழக எல்லைகளில் போலீசார் வாகன சோதனை

புதுச்சேரி - தமிழக எல்லைகளில் போலீசார் வாகன சோதனை

தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் வாகன போக்குவரத்தை தடுக்க தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் நடந்த வண்ணமே வந்து மீன், இறைச்சி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மதுவை வாங்கி செல்கின்றனர்.

  • News18
  • Last Updated :
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக புதுச்சேரி - தமிழக எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் இரு மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு இல்லை. இருப்பினும் புதுச்சேரி- தமிழக போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 3வது வாரமாக ஞாயிறுகிழமையான இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு இல்லை இதனால் புதுச்சேரி-தமிழக எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் இரு மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி - கடலூர் எல்லையான முள்ளோடை, புதுச்சேரி - விழுப்புரம் எல்லையான மதகடிப்பட்டு, புதுச்சேரி - மரக்காணம் எல்லையான கோட்டக்குப்பம், புதுச்சேரி - திண்டிவனம் எல்லையான கோரிமேடு ஆகியவற்றில் இரு மாநில போலீசாரும் வாகனங்களை தடுத்து நிறுத்துகிறார்கள். இதில் தமிழக பகுதிகளுக்கு எந்த வாகனத்தையும் தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. இதேபோல புதுச்சேரியில் எந்த தடையும் இல்லாத காரணத்தால் வெளி மாநில மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

முழு ஊரடங்கு காரணமாகவும் புதுச்சேரியில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது காரணமாகவும் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வருகை மிக குறைவாக உள்ளது. இதனால் புதுச்சேரி- தமிழ் எல்லைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அதே வேளையில் தமிழக-புதுச்சேரி எல்லைகளில் வித்தியாசமான காட்சிகள் காணப்படுகின்றன. இரு எல்லைகளிலும் ஒருபுறம் சகஜமான வாழ்க்கையில் மக்கள் இருப்பதும் மறுபுறம் இயல்பு வாழ்வில் பாதிப்பும் காணப்படுகிறது.

தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் வாகன போக்குவரத்தை தடுக்க தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் நடந்த வண்ணமே வந்து மீன், இறைச்சி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மதுவை வாங்கி செல்கின்றனர்.

புதுச்சேரிக்குள் பல தமிழக பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் முழு ஊரடங்கு இருந்தாலும் புதுச்சேரியில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இதனால் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கும் சென்ற வியாபாரம் செய்பவர்களும் வேலை செய்பவர்களும் முழு ஊரடங்கால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க மக்கள் கோருகின்றனர்.

Also read... புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 60% மருத்துவர்களுக்கு தொற்று - தமிழிசை சௌந்தரராஜன்!

கடலூர் பகுதியில் உள்ள கன்னியகோயில், விழுப்புரம் பகுதியில் உள்ள மதகடிப்பட்டு, கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கனக செட்டிகுளம் உள்ளிட்ட மாநில எல்லைப்பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கார்களில் வருபவர்களை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்ற ஆவணத்தை சரி பார்த்த பின்பும் மருத்துவம், திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்கு அனுமதி மறுத்து மீண்டும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது முகக் கவசம் அணியாமல் இருந்தால் உடனடியாக அவர்களுக்கு 200 ரூபாய் அபராதமும் விதித்து வருகின்றனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் அதிக அளவு திருமணம் நடைபெறுகிறது. திருமண பத்திரிக்கை வைத்து இருப்பவர்களுக்கு அதனை சரி பார்த்த பின்பு அனுமதி அளிக்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Pondicherry

அடுத்த செய்தி