Home /News /national /

இளநீர் வியாபாரியின் செல்போனை ஒரு மணி நேரமாக வைத்து கொண்டு ஆட்டம் போட்ட 'சேட்டை குரங்கு'

இளநீர் வியாபாரியின் செல்போனை ஒரு மணி நேரமாக வைத்து கொண்டு ஆட்டம் போட்ட 'சேட்டை குரங்கு'

இளநீர் வியாபாரியின் செல்போனை தூக்கி சென்ற குரங்கு

இளநீர் வியாபாரியின் செல்போனை தூக்கி சென்ற குரங்கு

Puducherry Monkey | ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் செல்போனை எடுத்த இடத்திலேயே மீண்டும் குரங்கு வைத்து சென்றதால் இளநீர் விற்கும் பெண்மணி மகிழ்ச்சி அடைந்தார்.

  • News18
  • Last Updated :
இளநீர் வியாபாரியின் செல்போனை தூக்கி சென்று ஆட்டம் போட்ட குரங்கு ஒரு மணி நேரம் போக்கு காட்டி  உரியவரிடம் ஒப்படைத்தது. பொது மக்கள் கூடி வேடிக்கை பார்த்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோடை காலம் என்பதால் புதுச்சேரி பழைய பேருந்து உழவர் சந்தையில்  இளநீர் கடைகள் அதிகமாக உள்ளது. இன்று காலை இளநீர் விற்கும் கடையில் கூட்டம் அதிகமாக அலை மோதியதால் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பெண்ணின் செல்போனை நைசாக தூக்கிக்கொண்டு குரங்கு ஒன்று மரத்தில் ஏறிக்கொண்டது.

இதனை கண்ட இளநீர் குடிக்க வந்தவர்கள் சத்தம் போடவே செல்போனுடன் குரங்கு மரத்தின் உச்சிக்கு சென்று விட்டது. வெகுநேரம் குரங்கிடும் கெஞ்சிக் கூத்தாடியும் குரங்கு செல்போனை கீழே போடவில்லை. பின்பு கூட்டம் கூடியதால், தனது மொபைல் நம்பரை கொடுத்து போன் செய்யச் சொன்னார். போனில் ரிங் வந்ததை பார்த்த குரங்கு கையில் எடுத்துக்கொண்டு செல்போனை காதில் வைத்துக் கொண்டும் பேசியபடி பாவனை காட்டியும் ஒரு மணி நேரம் அங்குமிங்கு சாக்கு போக்கு காட்டியதால் செய்வதறியாது திகைத்த அந்த பெண் மீண்டும் வியாபாரத்தை கவனிக்க தொடங்கி விட்டார்.

கூட்டம் அதிகமாக கூடவே அனைவரும் செல்போனுடன் ஓடிய குரங்கை பார்த்து வீடியோ எடுத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு வெகுநேரமாக கூட்டத்தில் உள்ளவர்கள் செல்போனை கேட்டு கெஞ்சியும் கொடுக்கவில்லை.

Also read... திருட்டுப்போன நகை பணத்தை ஒரே வாரத்தில் கண்டுபிடித்த நாகை போலீஸ்

இதனை அடுத்து ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் செல்போனை எடுத்த இடத்திலேயே மீண்டும் குரங்கு வைத்து சென்றதால் இளநீர் விற்கும் பெண்மணி மகிழ்ச்சி அடைந்தார். "குரங்கு எடுத்து சென்றது சாதாரண செல்போன் தான். எத்தனை நாட்களுக்கு தான் நாமே பேசி கொண்டிருப்பது கொஞ்ச நேரம் குரங்கும் பேசட்டும் என இளநீர் வியாபாரி கூலாக நம்மிடம் தெரிவித்தார்.

குரங்கினை சேட்டையை காண மக்கள் வெகுவாக கூடியதால் உழவர்சந்தை அருகே போக்குவரத்து பாதிக்கப்பட அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஒழுங்கு படுத்தினார்கள். இதனால் அங்கு ஒருமணிநேர பரபரப்பு காணப்பட்டது.

புதுச்சேரி தாவரவியல் பூங்காவை யொட்டி உழவர்சந்தை அமைந்துள்ளது. பூங்காவில் மிக பழமையான மரங்கள் உள்ளன. இதனால் அடிக்கடி குரங்குகள் இங்கு வருவது வழக்கம். அவை உழவர்சந்தை பகுதிக்கு வந்து பழம், காய்கறிகளை எடுப்பது வழக்கம். இப்போது செல்போனை எடுத்திருப்பது வியாபாரிகளை அச்சப்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Monkey, Smart Phone

அடுத்த செய்தி