தி காஷ்மீர் பைல்ஸ் (The Kashmir Files) திரைப்படத்தின் மீது துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு (Governor Tamilisai Soundarrajan) தனிப்பட்ட ஆர்வம் இருப்பது அரசியல் செய்வதை காட்டுகிறது என முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி (Narayansamy)
குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் திட்டமிட்டே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இந்த வழக்கு புதுச்சேரி- தமிழகம் மற்றும் வேறு சில மாநிலங்களும் தொடர்பில் இருப்பதால் புதுச்சேரி அரசை விசாரிப்பது சரியல்ல. தேசிய புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
காஷ்மீர் பைல்ஸ் (The Kashmir Files) திரைப்படத்தை மத்திய அரசு மீண்டும் சென்சார் செய்ய வேண்டும் என வலியுறுத்திய நாராயணசாமி, இந்த திரைப்படத்தின் மீது துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு தனிப்பட்ட ஆர்வம் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார். இப்படத்தை பார்க்க வேண்டும் என அரசுத் துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். முதலமைச்சரும் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் இந்தப் படத்தை (The Kashmir Files) சென்று பார்த்துள்ளார். இதிலிருந்து தமிழிசை அரசியல் செய்வது தெரிகிறது என்றும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரியில் காவலர் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் ரூ.7 லட்சம் கொடுத்தால் காவலர் பணி உறுதி என தரகர்கள் பேரம் பேசுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி நேரிடையாக தலையிட்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 5 மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வேலையை யாரும் செய்யக்கூடாது என்றும், இந்த நேரம் நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
Also Read : பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்.. போராட்டத்தை நிறுத்தி வழிவிட்ட இஸ்லாமியர்கள்
மேலும் வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய மதச்சாற்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்தால் பாஜகவை எளிதில் வீழ்த்தலாம் என்றும், அதற்கான வியூகங்களை இப்போதே வகுக்க வேண்டும். இது தோல்வியல்ல வெற்றிக்கான முதல்படி என கூறினார். புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்தியில் இருந்து நிறைய நிதி கொண்டு வந்து வளர்ச்ச்சி கண்போம் என்றனர். ஆனால் ஒரு வருடம் முடிவடைய உள்ள நிலையில் பட்ஜெட்டிற்கு அதிக நிதி வாங்கவில்லை என்றும், தற்போது முதலமைச்சர் ரங்கசாமி முழுமையான பட்ஜெட் போடாமல் இடைக்கால பட்ஜெட்டிற்காக சட்டசபையை கூட்ட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பாஜக கூட்டணியில் மத்திய அரசோடு முதல்வர் ரங்கசாமி இணக்கமாக உள்ளார். ஆனால் ஏன் அவர் முழுமையான பட்ஜெட் போடவில்லை? இதற்கு புதுச்சேரி பாஜக தலைவர்கள் முட்டுகட்டை போடுகின்றார்களா? அல்லது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு முழுமையான பட்ஜெட் போட கூடாது என தடுத்து நிறுத்துகின்றார்களா? என கேள்விகளை நாராயணசாமி எழுப்பியுள்ளார். இதற்குபாஜகவும், முதல்வர் ரங்கசாமியும் விளக்கம் தர வேண்டும் என்றும் கடந்த காங்கிரஸ் அரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி எந்தளவிற்கு தொல்லை தர முடியுமோ, அந்தளவு தொல்லை கொடுத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.