புதுச்சேரியில் மேலும் இரு பஞ்சாலைகள் மூடல்...!

புதுச்சேரியில் மேலும் இரு பஞ்சாலைகளான சுதேசி, பாரதி மில்கள் நாளையுடன் மூடப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் மேலும் இரு பஞ்சாலைகள் மூடல்...!
பஞ்சாலை
  • News18
  • Last Updated: September 29, 2020, 4:32 PM IST
  • Share this:
புதுச்சேரியின் அடையாளமாக ஏஎப்டி, பாரதி, சுதேசி ஆகிய பஞ்சாலைகள் இயங்கி வந்தது. இந்த 3 ஆலைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

புதுச்சேரியின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக இந்த ஆலைகள் இருந்தன. இந்நிலையில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்த மில்கள் நலிவடைய தொடங்கியது.

இதனை மீண்டும் புனரமைத்து இயக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது. இதற்காக மத்திய அரசிடம் நிதி பெறவும் முயற்சித்தனர். ஆனால் நிதி கிடைக்கவில்லை.  பலர் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினர்.


Also read... உலகை உலுக்கிய கொரோனாவை தொடர்ந்து, மிரட்டும் டெங்கு காய்ச்சல்.. சுகாதாரத்துறை நடவடிக்கைகள் என்னென்ன?

3 ஷிப்டுகளில் இயங்கிய ஆலைகள் பெயரளவில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. 3  மில்களை இணைத்து புதுச்சேரி பஞ்சாலைக்கழகம் என மாற்றமும் செய்தனர். இருப்பினும் நஷ்டத்தின் காரணமாக கடந்த சில மாதத்திற்கு முன்பு ஏஎப்டி மில் மூடப்பட்டது.

இந்நிலையில் எஞ்சியிருந்த மற்ற பாரதி, சுதேசி மில்கள் சொற்ப தொழிலாளர்களுடன் இயங்கி வந்தது. தற்போது இந்த ஆலைகளும் நாளை புதன்கிழமை முதல் மூடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மேலாண் இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ளார்.அதில் அவர், சுதேசி, பாரதி ஜவுளி ஆலையின் கீழ் இயங்கும் ஸ்ரீபாரதிமில் மற்றும் சுதேசி காட்டன் மில்ஆகிய 2 ஆலைகளையும் அரசின் உத்தரவுப்படி தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 25(0) படி 30.9.2020ம் தேதியுடன் மூடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆலைகளை மூடுவதற்கு சட்டமன்ற அதிமுக கொறடா வையாபுரிமணிகண்டன் எம்எல்ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில பொருளாதாரத்தின் அச்சாக இயங்கி வந்த ஏஎப்டி மில்லை அரசின் நிர்வாக திறமையின்மையால் படிப்படியாக சீர்குலைத்தது. இறுதியில் ஏஎப்டி மில்லை மூடுவதாக அறிவித்தது.

வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை தருவாக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால் 5 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் மாநிலத்தில் ஒருவருக்குகூட அரசு வேலை வழங்கவில்லை.

இந்நிலையில், ஸ்ரீபாரதிமில் மற்றும் சுதேசி காட்டன் மில்ஆகிய 2 ஆலைகளும் மூடப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி அரசின் திறமையற்ற நிர்வாக கோட்பாடுகளால், தொழில் கொள்கைகளால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. எதற்கெடுத்தாலும் மற்றவர்களின் மீது பழிபோடும் ஆட்சியாளர்கள், இதற்கும் சப்பைக்கட்டு கட்ட தயாராக இருப்பர் என்றும் வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading