Home /News /national /

புதுச்சேரியில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது...!

புதுச்சேரியில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது...!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

புதுச்சேரியின்இறுதி வாக்காளர் பட்டியலில்ஆண்களை விட 60,125 பெண்கள் கூடுதலாக உள்ளனர்.

  • News18
  • Last Updated :


புதுச்சேரியின் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்கள் கூடுதலாக உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1.1.2022 தகுதி நளாக கொண்டு புதுவையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்தது.இந்த பணி முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த பட்டியலை புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் இன்று வெளியிட்டார். இதை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.


இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதுவை மாநிலத்தில் 4,75,110 ஆண் வாக்காளர்கள், 5,35,225 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தினர் 120 பேர் என மொத்தம் 10,10,455 வாக்காளர்கள் உள்ளனர்.






புதுவை பிராந்தியத்தில் 3,67,302 ஆண் வாக்காளர்கள், 4,11,215 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தினர் 99 பேர் என மொத்தம் 7,78,616 பேர் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் விடுமுறை நாட்கள் தவிர்த்து 7 நாட்கள் அனைத்து ஓட்டுச்சாவடிகள், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.




புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் தெரிவித்துள்ளார். இதனிடையே புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அபூர்வா கார்க் அரசியல் கட்சிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Voter List

அடுத்த செய்தி