Home /News /national /

நம்ம புதுவையில் கோலாகலமான கடற்கரை திருவிழா - ஏப்ரல் 13 முதல் 4 நாள் கொண்டாட்டம்

நம்ம புதுவையில் கோலாகலமான கடற்கரை திருவிழா - ஏப்ரல் 13 முதல் 4 நாள் கொண்டாட்டம்

Puducherry Beach Festival | யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் இந்த கடற்கரை சுற்றுலா உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Puducherry Beach Festival | யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் இந்த கடற்கரை சுற்றுலா உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Puducherry Beach Festival | யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் இந்த கடற்கரை சுற்றுலா உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    புதுச்சேரியில் 4 நாட்கள் நடைபெறக் கூடிய கடற்கரை திருவிழா ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்தக் கோலாகல திருவிழாவுடன் கோடைகாலம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் இந்த கடற்கரை சுற்றுலா உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இந்தத் திருவிழாவை முன்னிட்டு காந்தி சிலை கடற்கரை, சுண்ணாம்பார் நீர் விளையாட்டு வளாகம், பாண்டி மெரீனா மற்றும் பாரடைஸ் கடற்கரை ஆகிய இடங்களில் கோலாகல ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை செய்து வருகிறது. இந்த திருவிழாவிற்கு, ”I Sea Pondy 2022’’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    கடற்கரை திருவிழா குறித்து அனைவருக்கும் தகவல் அளிக்கும் வகையில், புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் கே.லெட்சுமி நாராயணன் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, அதில், இந்த திருவிழா குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, 4 நாட்கள் நடைபெற உள்ள கொண்டாட்ட நிகழ்ச்சிகளை அமைச்சர் பட்டியலிட்டார். ஃபேஷன், மியூஸிக், நடனம், உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்தத் திருவிழா இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    மியூஸ்க், நடனம், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள்

    கடற்கரை திருவிழாவில் வான விளக்கு காட்சி, பாண்டு இசை, சிலம்பம், வாலிபால் போட்டி, ஃபோல்க்லோர் மியூஸ்கிக், நடனம், சினிமா ஆர்கெஸ்ட்ரா, பப்புள் ஷோ, கட்டுமரப் படகு போட்டி, ஜிம்நாஸ்டிக்ஸ், சைக்கிள் மராத்தான், கடல் உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தமிழ் புத்தாண்டு சிறப்பு

    ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தமிழ் புத்தாண்டை ஒட்டி இந்தத் திருவிழா வருகிறது. இந்தத் திருவிழா மாபெரும் வெற்றி பெறும் என்றும், எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இது உதவிகரமாக இருக்கும் என்றும் அமைச்சர் லெட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் பேசுகையில், “கடற்கரை திருவிழாவின் மூலமாக புதுச்சேரியின் வரி வருவாய் அதிகரிக்கும் என்று கருதுகிறோம். இந்தத் திருவிழா குறித்த தகவலை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வார இறுதியில் புதுச்சேரிக்கு அதிகம் வருகின்றனர் என்ற நிலையில், வார நாட்களிலும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.


    புதுச்சேரி டிரிப் போகலாம்

    ஏப்ரல் 14ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டை ஒட்டி விடுமுறை நாள் வருகிறது. இதற்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டால், சனி, ஞாயிறு ஆகிய தினங்களையும் சேர்த்து நல்லதொரு லாங் டிரிப்பாக இந்த திருவிழா காலத்தில் புதுச்சேரிக்கு சென்று வரலாம்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Puducherry, Trending

    அடுத்த செய்தி