வில்லியனூர் மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
வில்லியனூர் மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
புதுச்சேரியின் வில்லியனூரில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்தன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம்.
புதுச்சேரியின் புகழ்பெற்ற தூய லூர்தன்னை திருத்தலத்தின் 145வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரியின் வில்லியனூரில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்தன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம்.
அதன்படி 145வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றதுடன் துவங்கியது. காலை 5.30 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்திருக்கும் அருள்நிறை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர், திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி ஆண்டு திருவிழாவினை துவக்கி வைத்தார்.
முன்னதாக அருள்நிறை ஆலயத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள் மற்றும் தேர்ப் பவனி நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 30ம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் சவரிமுத்து ஆரோக்கியராஜ் தலைமையில் திருவிழா முன் மாலை கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.
மே 1ம் தேதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் இராயப்பன் தலைமையில் திருவிழா காலை கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.
காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெறவிருக்கிறது.
இதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருவிழா மாலை திருப்பலி , அதனை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெருவிழா ஆடம்பர தேர்ப்பவனி நடைபெறவிருக்கிறது. மறுநாள் மே 2ம் தேதி காலை 6.30 மணி திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கம் நடைபெற உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.