Home /News /national /

ஆளுநருக்கு கோப்புகளைத் திரும்பி அனுப்ப அதிகாரம் உள்ளது - ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

ஆளுநருக்கு கோப்புகளைத் திரும்பி அனுப்ப அதிகாரம் உள்ளது - ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழிசை சௌந்தர்ராஜன்

ஆளுநருக்கு கோப்புகளைத் திரும்பி அனுப்ப அதிகாரம் உள்ளது என்று தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளாலும், மக்களாலும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு அமைந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று சட்டமன்றதில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. சுமார், 8 மாத காலம் ஆளுநர் நீட் மசோதாவின் மீது எந்த முடிவும் எடுக்காத நிலையில் நேற்று தீர்மானம் திரும்பி அனுப்பப்பட்டது.

    பிப்ரவரி 1-ம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

    இந்தநிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ‘கொரோனா தொற்று குறைந்துள்ளது. மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கிறார்கள். பள்ளிகளில் தடுப்பூசி பெரும்பாலும் போடப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு போடப்படும். ஆளுநருக்கு கோப்புகளை திருப்பி அனுப்ப முழு அதிகாரம் உள்ளது. ஆளுநர் சில கருத்துக்களை கூறிஉள்ளார். சபாநாயகர் என்ன முடிவும் எடுக்கலாம்.

    ஆனால் ஆளுநர் திருப்பி அனுப்ப கூடாது என கூற முடியாது. நீட் தேர்வில் ஆளுநர் பா.ஜ.கவின் கைபாவையாக உள்ளதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். எல்லா ஆளுநர்களும் திறமைசாலிகள். அவர்களுக்கான உரிமையைதான் செய்துள்ளனர். கோப்புகளை திருப்பி அனுப்ப சரத்து உள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என சொல்ல முடியாது. கோப்புகளை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Tamilisai Soundararajan

    அடுத்த செய்தி