Home /News /national /

ஒரு சாலையில் இரு நடவடிக்கை... புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் தமிழக போலீசார் கட்டுப்பாடு..புதுச்சேரி சார்பில் கட்டுப்பாடு இல்லை

ஒரு சாலையில் இரு நடவடிக்கை... புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் தமிழக போலீசார் கட்டுப்பாடு..புதுச்சேரி சார்பில் கட்டுப்பாடு இல்லை

புதுச்சேரி எல்லை

புதுச்சேரி எல்லை

புதுச்சேரியில் முழு ஊரடங்கு போன்ற தீவிர கட்டுப்பாடுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரிக்குள் வரவில்லை.புதுச்சேரியில் இருந்தும் தமிழக பகுதிகளுக்கு புதுச்சேரி பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் உள்ள கோரிமேடு எல்லையில் தமிழக  போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு போன்ற தீவிர கட்டுப்பாடுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை.

    இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரிக்குள் வரவில்லை.புதுச்சேரியில் இருந்தும் தமிழக பகுதிகளுக்கு புதுச்சேரி பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் பேருந்து நிலையம்
    வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊரடங்கை மீறி தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு புதுச்சேரி எல்லையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதுச்சேரி அரசு சார்பில் எந்த கட்டுபாடும் இல்லை. இந்த சூழலில் புதுச்சேரி எல்லையில் வித்தியாசமான சூழல் நிலவுகிறது.

    இதையும் படிங்க: குற்றப் பின்னணி வேட்பாளர்கள்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு


    தமிழகத்தில் இருந்து பரவலாக வாகனங்கள் புதுச்சேரிக்கு செல்லும் நிலையில் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. காவல்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தமிழக பகுதிக்குள் செல்ல அனுமதிக்கிறார்கள். தேவையற்ற காரணத்துடன் வருபவர்களுக்கு தமிழகத்திற்குள் அனுமதி இல்லை. புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் உள்ள கோரிமேடு எல்லையில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினார்கள். ஊரடங்கு மீறி வருபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

    மேலும் படிங்க: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது.. 327 பேர் உயிரிழப்பு!


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Lockdown, Puducherry, Tamilnadu

    அடுத்த செய்தி