திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பாதுகாப்பு உடையணிந்து தனது வாக்கினை செலுத்தினார்
கடந்த ஏப்ரல் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க இன்னும் 1 மணி நேரமே உள்ள நிலையில் இறுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் 5மணி நேர நிலவரம்
நாமக்கல் 70.79% (அதிகபட்சம் )
நெல்லை 50.05% (குறைந்த பட்சம் )
தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் வாக்குப்பதிவு, தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ,தேர்தல் கள செய்திகள், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் இங்கே அறியலாம்.