அடுத்து குடியரசு தலைவராக தங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதே என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கையெடுத்து கும்பிட்டுவிட்டு புறப்பட்டார்.
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு நிதி திரட்டும் வகையில் புகைப்படக்காரர் பட்டாபிராமன் தனது புகைப்படங்களை கண்காட்சியாக காட்சிப்படுத்தியுள்ளார்.
கடந்த 20 ம் தேதி முதல் நடைபெறும் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று பார்வையட்டு ஒரு படத்தை விலை கொடுத்து வாங்கினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குடியரசு தினத்தன்று இருமாநிலங்களில் கொடியேற்றியதை அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் குடியரசு தினத்தன்று இரண்டு மாநிலங்களிலும் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தியது இரண்டு மாநில மக்களையும் மதிக்கும் செயல் என்றும் கூறினார்.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஒற்றர்களாக செயல்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த தமிழிசை, புதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே நல்ல இணக்கமான சூழ்நிலை உள்ளது.
கடந்த காலங்களில் ஒற்றுமையாக இல்லை. இப்போது இருக்கும் ஒற்றுமை இருப்பதை பார்த்து சிலரால் பொறுத்த கொள்ள முடியவில்லை எனவும் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை எதிர்மறையாக பார்க்கின்றார்கள். ஆளுநர்கள் அனைவரும் தங்கள் பணியை சரியாக செய்கின்றார்கள்.
Also read... ஆக்கிரமிபுகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் தொடர்பான இடங்களை எந்த பதிவும் செய்ய கூடாது - உயர் நீதிமன்றம்!
முன்பெல்லாம் ஆளுநர்கள் மாளிகைகக்குள் தான் இருப்பார்கள். தற்போதுமக்கள் பணிகளை மேற்கொள்ளவதை வரவேற்க வேண்டும் என பதிலளித்தார். இரண்டு மாநிலங்களில் கொடியேற்றியது சரித்திரம் என்றால், தமிழர்கள் சரித்திரம் படைப்பதை வரவேற்கலாம் என தமிழிசை கூறிகூறினார்.
அடுத்து குடியரசு தலைவர் தமிழர் தான் என கூறப்படுகிறது. தங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதே என்ற கேள்விக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை கையெடுத்து கும்பிட்டுவிட்டு புறப்பட்டார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.