குடியரசுத் தினத்தையொட்டி தெலங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இரு இடங்களிலும் தேசிய கொடியை பறக்கவிட்டார்.
நாட்டின் 73வது மூன்றாவது குடியரசுத் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக சுதந்திர தினத்தின்போது மாநிலங்களில் மாநில முதல்வர்களும் குடியரசுத் தினத்தின்போது ஆளுநரும் தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம். அதன்படி தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இருமாநிலங்களிலும் இன்று தேசிய கொடியை ஏற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனினும், அறிக்கப்பட்டபடியே இருமாநிலங்களிலும் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை பறக்கவிட்டார்.
தெலங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், காலை 7:30 மணிக்கு தேசியக் கொடியை தமிழிசை சௌந்தரராஜன் பறக்கவிட்டார். இதை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார். பின்னர், தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசியக் கொடியை பறக்கவிட்டார்.
இதையும் படிங்க: என்.டி.ஆர், ஸ்ரீ பாலாஜி உட்பட 13 மாவட்டங்கள் புதிதாக உதயம்.. ஆந்திர அரசு அதிரடி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.