Vaccination : புதுச்சேரியில் நாளை முதல் கிராமம் தோறும் தடுப்பூசி போடப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் கொரோனா இல்லாத கிராமங்களை உருவாக்கும் நடவடிக்கையாக நாளை முதல் கிராமம் தோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. அங்கே, கடந்த 24 மணி நேரத்தில் 1,137 பேர் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 20 பேர் வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

24 மணி நேரத்தில், புதுச்சேரியில் 833 பேருக்கும், காரைக்காலில் 234 நபர்களுக்கும், மாஹேவில் 38 நபர்களுக்கும், ஏனாமில் 32 பேருக்கும் என மொத்தம் 1,137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புதுச்சேரியில் 15 பேரும், காரைக்காலில் 2, ஏனாமில் 3 என 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,455 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 14,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 84,749 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு 1,00677 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Must Read : கொரோனா தடுப்பூசி குறித்து ஊரக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - ராமதாஸ்!

 

இந்நிலையில், நாளை முதல் கிராமம் தோறும் தடுப்பூசி போடப்படும். அதன்படி, ஒவ்வொரு கிராமமாக தேர்வு செய்து தடுப்பூசி அளிக்கப்படும் எனவும், இதனால் கொரோனா இல்லாத கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published: