'அஜித், விஜயை விட காந்தி, வ.உ.சிக்கு தட்டும் கைதட்டல் அதிகமாக இருக்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜன்
'அஜித், விஜயை விட காந்தி, வ.உ.சிக்கு தட்டும் கைதட்டல் அதிகமாக இருக்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்
Tamilisai Soundararajan | நடிகர்கள் அஜித், விஜய்க்கு தட்டும் கைதட்டலை விட அகிம்சை மற்றும் விஜயத்தை பெற்றுக்கொடுத்த காந்தி மற்றும் வஉசிக்கு தட்டும் கைதட்டல் அதிகமாக இருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அஜித், விஜய்க்கு தட்டும் கைதட்டலை விட அகிம்சை மற்றும் விஜயத்தை பெற்றுக்கொடுத்த காந்தி மற்றும் வ.உ.சிக்கு தட்டும் கைதட்டல் அதிகமாக இருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் காந்தி மையம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது நடிகர் அஜித்துக்கு கை தட்டுவதை காட்டிலும் அகிம்சையை போதித்த காந்திக்கு கைதட்டுவது அதிகமாக இருக்க வேண்டும். அதேபோல் விஜய்க்கு கை தட்டுதலை விட விஜயத்தை பெற்றுத் தந்த வ.உ.சிக்கு அதிகம் கைதட்ட வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நடிகர் ராமேஷ் கண்ணா நகைச்சுவையை அதிக அளவில் கொடுத்தவர். நகைச்சுவை நல்ல சிகிச்சை என்று தெரிவித்த அவர், பெண்கள் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டுமென துடிக்கின்றனர்.
அதேநேரத்தில் காலத்தோடு இல்வாழ்க்கையிலும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் நான் ஆளுநராக இருப்பதை விட குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பதையே பெருமையாக கருதுவதாகவும், கணவருக்கு நல்ல மனைவியாக இருப்பதையே பெருமையாக கருதுவதாக தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், பெண்களுக்கு அதிகாரம் மிகுந்த வாழ்க்கையைவிட அன்பு மிகுந்த வாழ்க்கை தான் மகிழ்ச்சியைத் தரும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் தனசேகரன், நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.