புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக துணைநிலை ஆளுநர் தமிழில் பட்ஜெட் உரை

தமிழிசை சவுந்தரராஜன்

மாலை 4.30 மணிக்கு புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

 • Share this:
  புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக தமிழில் துணைநிலை ஆளுநர் பட்ஜெட் உரை புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் பட்ஜெட் உரையாற்றினார்.

  புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. அப்போது, திருக்குறளை வாசித்து தனது உரையை தொடங்கினார் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

  தொடர்ந்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், கொரோனா தொற்று அதிகரித்து இருந்த நிலையில் தற்போது அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு நன்றி.

  அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். சிறந்த நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் பேரவையில் தாக்கல் செய்வார் என நம்புகிறேன். வேளாண் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு செய்யப்பட்டு வருகிறது.

  ஆண்டு தோறும் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆடிப்பட்டம் தினத்தன்று ரூ.250 மதிப்பிலான இலவச காய்கறி விதைகள் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.” என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார் தமிழிசை சவுந்தரராஜன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், நண்பகல் 11.15க்கு துணை சபாநாயகர் பதவிபேற்கிறார். அதனைத் தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பையும் கவனிக்கும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: